
டி.டி.வி.தினகரன் குறித்து அமைச்சர்களும், அமைச்சர்கள் குறித்து தினகரனும் புகார் அளித்துவரும் அதே வேளையில், ஆட்சிப்பணியை கவனிக்காமல் இருந்து விடக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லி திஹார் சிலையில் இருந்து விடுவிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் கட்சிப் பணியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சர்கள் குழு நேற்று கூடி தினகரனை கட்சிக்குள் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்து அறிவித்தனர்.
என்னை கட்சிக் பணியாற்றக்கூடாது என கூற இங்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அமைச்சர்களும், டி,டி,வி.தினகரனும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொள்வது நல்லதல்ல என்றார்.
இப்படி தாக்கி பேசுவதிலேயே கவனமாக இருந்தால் ஆட்சிப்ணியை கவனிக்க முடியாது என தெரிவித்த தமிழிசை, அரசு முறையாக இயங்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.
நடு இரவில் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அதிமுகவினருக்கு தமிழிசை எச்சரிக்கை விடுத்தார்.