
டி.எஸ்.பி. கார்த்திகேயனை கன்னாபின்னாவென கண்டிக்கிறது சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க!
எதுக்காம்?...
ஆளுங்கட்சியே தங்கள் அரசின் கீழ் பணிபுரியும் ஒரு போலீஸ் அதிகாரியை கண்டிக்கிறதென்றால் அவரு செம்ம நேர்மையான அபீஸர், அநியாயம் செய்யும் அந்த ஏரியா அ.தி.மு.க.வினரை புரட்டியெடுக்கிறார் போல, சட்டத்தை கையிலெடுத்து அ.தி.மு.க.வினர் விளையாட இவரோ அவங்களை ‘துரைசிங்கம்’ மாதிரி துவம்சம் பண்ணிட்டிருக்கார் போல அதனாலேயே இந்த கண்டனம்...என்றெல்லாம் நீங்க அதுக்குள்ளே கற்பனைக்குள்ளே போனால் கம்பெனி பொறுப்பேற்காது.
ஆக்சுவலி இது விஷயமே வேற!
டி.எஸ்.பி.யை கண்டிப்பதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். அதாவது டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளியே வந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து திருப்பத்தூரின் மாஜி எம்.எல்.ஏ.வும், கழக அமைப்புச்செயலாளருமான உமாதேவன் தலைமையில் தொண்டர்கள் காரைக்குடியின் இனிப்பு வழங்கினார்களாம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடுத்த டி.எஸ்.பி. ‘ஜெயிலுக்கு போனவனுக்கெல்லாம் எதுக்குடா வெடி போடுறீங்க?’ என்று திட்ட்ட்ட்ட்டி, கலைந்து செல்லாவிட்டால் துப்பாக்கியால் சுட்டுவேன் என்று மிரட்டினாராம். கூடவே உமாதேவனை தரக்குறைவாகவும் பேசினாராம். இதற்குதான் கண்டனத்தை தெறிக்க விட்டிருக்கிறது சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.
‘இருங்க சார், எங்கண்ணன் தினகரன் கூடிய சீக்கிரம் சி.எம். ஆவாப்ல. அப்புறம் உங்கள தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துவோம்.’ என்று பிரச்னையின் போது அ.தி.மு.க.வினர் எதிர்குரல் கொடுக்க, அதற்கு ’தமிழ்நாட்டுல இப்போ இருக்கிற நிலமைக்கு எல்லா ஊரும் தண்ணியில்லா காடுதான். எங்கே வேணா மாட்திக்க இப்ப இடத்த காலி பண்ணு.’ என்று நறுக் பதில் சொல்லி விரட்டியதாம் போலீஸ்.
பப்ளிக்கா நம்மள அசிங்கப்படுத்திப்புட்டாரே என்று கொதித்தெழுந்துதான், இந்த கண்டத்தை பரப்பி வருகிறார்கள் அ.தி.மு.க.வினர். அதுவும் செலவேயில்லாமல் வாட்ஸப்பில்.
மாஜி எம்.எல்.ஏ.வை திட்டுனதை கண்டிச்சு ஒரு போஸ்டரடிக்க கூட மனசில்லையா ரத்தத்தின் ரத்தங்களுக்கு? ரொம்ப்ப்ப்ப்ப மாறிட்டானுவலே!