ராசாவின் பேச்சுக்கு எந்த பிராமனணும் போராடவில்லை: யாருக்காக போராடினோமோ அவன்தான் எதிர்க்கிறான்-RS பாரதி.

By Ezhilarasan BabuFirst Published Sep 19, 2022, 7:57 PM IST
Highlights

ஆ ராசாவின் பேச்சை எந்த பிராமணனும் எதிர்க்கவில்லை,  ஆனால் நாம் யாருக்காக பேசுகிறோமா அவன்தான் எதிர்த்துப் போராடுகிறான் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். தமிழர்கள் மத்தியில் இன்று மான உணர்ச்சி மங்கிப்போய் விட்டது, சொரணை போய்விட்டது என்றும் ஆர்.எஸ் பாரதி வேதனை தெரிவித்துள்ளார். 

ஆ.ராசாவின் பேச்சை எந்த பிராமணனும் எதிர்க்கவில்லை,  ஆனால் நாம் யாருக்காக பேசுகிறோமா அவன்தான் எதிர்த்துப் போராடுகிறான் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். தமிழர்கள் மத்தியில் இன்று மான உணர்ச்சி மங்கிப்போய் விட்டது, சொரணை போய்விட்டது என்றும் ஆர்.எஸ் பாரதி வேதனை தெரிவித்துள்ளார். 

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தில் ஆரிய-திராவிட கருத்தியல் மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சாதியின் பெயரால், வர்ணத்தின் பெயரால் மனித சமூகத்தை பிரித்து உயர்வு தாழ்வு போதிக்கிறது இந்துமதம் என்ற கருத்து நீதிக்கட்சி காலம் தொடங்கி பெரியார் முதல் திருமாவளவன், ஆர் ராசா வரை பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா இந்து மதம் குறித்து விமர்சித்து பேசினார். 

இந்து மதம் என்பது மனிதனை வர்ணமாக பிரித்து வைத்துள்ளது,  நீ இந்து என்று சொன்னால் நீ சூத்திரன் தான், நீ இந்து என்று சொன்னால் நீ பஞ்சமன் தான், நீ இன்று என்று சொன்னால் நீ தீண்டத்தகாதவன்தான், ஆக சூத்திரன் என்று சொன்னால் வேசியின் பிள்ளை என்று பொருள் என இந்து மதம் சொல்கிறது, அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் வேசியின் பிள்ளைகளாக இருக்க விரும்புகிறீர்கள் என அவர் பேசினார். அவரின் இந்த கருத்தை மேற்கோள்காட்டி பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் ராசாவுக்கு எதிராக போராடி வருகின்றன.

இந்துக்களை இழிவுபடுத்திப் பேசிய ஆ ராசாவை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பாஜகவினர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர். ராசா தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்து அல்ல அது மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருத்துதான், ஆனால்  பாஜகவினர் திரித்து அதை ராசா சொன்னதாக பேசி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ராசாவின் பேச்சுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகிறது. ராசா பேசியதில் எந்தத் தவறும் இல்லை என சீமான் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- திமுகவை அழிக்க நினைத்தவர்கள் நிலை என்ன ஆனது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை,  குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் தான் இன்று குடிமிப் பிடித்துக்கொண்டு கோர்ட்டில் நிற்கிறார்கள்,  இனிமேல் எந்த பொதுக்கூட்டம் நடத்தினாலும் அதில் கழக வரலாற்றை பேச வேண்டும், ஆ ராசா பேசியதை மிகப்பெரிய குற்றம் என ஒரு கூட்டம் எதிர்த்து வருகிறது,  இன்றுள்ள தமிழர்களிடம் சொரணை கெட்டு போய்விட்டது.

சமதர்மம் நாட்டில் நிலவும் பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம், ராசாவின் இந்த பேச்சுக்கு எந்த பிராமணனும் போராடவில்லை, யாருக்காக இத்தனை ஆண்டுகாலம் போராடினோமோ அவன்தான் எதிர்க்கிறான், இன்று இளைய சமுதாயத்திடம் பெரியாரிசம் தலைதூக்குகிறது, இது நாட்டிற்கு ஒரு ஆரோக்கியமான போக்கு, இன்று பள்ளி மாணவர்களிடையே ஆர்எஸ்எஸ் பயிற்சி தொடங்க ஆரம்பித்துவிட்டது, இந்த போக்கு நீடித்தால் தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றி விடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். 
 

click me!