அதிமுகவில் இரட்டை இலையுடன் நான் பணியாற்றுகையில் ஆர்.பி.உதயகுமார் பிறக்கவே இல்லை… அய்யப்பன் சாடல்!!

Published : Sep 19, 2022, 05:43 PM IST
அதிமுகவில் இரட்டை இலையுடன் நான் பணியாற்றுகையில் ஆர்.பி.உதயகுமார் பிறக்கவே இல்லை… அய்யப்பன் சாடல்!!

சுருக்கம்

மிட்டாய் கொடுத்து கூட்டி செல்ல நான் சிறு பிள்ளை அல்ல என்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். 

மிட்டாய் கொடுத்து கூட்டி செல்ல நான் சிறு பிள்ளை அல்ல என்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய பணிகளுக்காக வைகை அணையிலிருந்து 58 ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க மனு அளித்தேன். 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பதால் 33 கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கும், நான் 8 வயதிலிருந்து எம்.ஜி.ஆர் உடன் அதிமுகவில் பணியாற்றி வருகிறேன்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுக முக்கிய பிரமுகர் சிக்னல் - அதிர்ச்சியில் எடப்பாடி

மிட்டாய் கொடுத்து கூட்டி செல்ல நான் சிறு பிள்ளை அல்ல, நான் இரட்டை இலையுடன் கட்சி பணியாற்றி பொழுது ஆர்.பி.உதயகுமார் பிறக்கவேயில்லை, சிறுபிள்ளைத்தனமாக ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார், அதிமுக ஒன்றினைய ஒ.பி.எஸ் கட்டளைப் படி நாங்கள் யாரையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க: “எட்டப்பன் ஓபிஎஸ்சுக்கு ஒரே வழி.. ஸ்டாலினுக்கு நாட்டுல நடக்குறதே தெரியாது”.. அலறவிட்ட சி.வி சண்முகம் !!

எதிர் வரும் தேர்தல்களில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலை சந்திக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். முன்னதாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?