நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுக முக்கிய பிரமுகர் சிக்னல் - அதிர்ச்சியில் எடப்பாடி

By Raghupati RFirst Published Sep 19, 2022, 4:50 PM IST
Highlights

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி சாத்தியமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி உடையுமா எனும் கேள்வி சமீபகாலமாக எழுந்து வருகிறது. காரணம், அதிமுக மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தங்கள் தோழமைக் கட்சிகள் குறித்து மாறி மாறி தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் பேரூர் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு..60 மாணவிகளின் குளியல் வீடியோஸ்.. லீக் செய்த சக மாணவி கைது - ஆபாச தளத்திற்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

அப்போது பேசிய அவர், ‘திமுக ஆட்சியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஏழை மக்களுக்கு பயன்பட க்கூடிய திட்டங்களை நிறுத்தியது தான் திமுக. ஆட்சியின் கடந்த 1 ½ ஆண்டு கால சாதனையாகும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தி. மு. க. அரசு நிறைவேற்றவில்லை. வருகிறபாராளுமன்ற தேர்தலில்பாஜகவுடன் கூட்டணிஅமைப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு எடுக்கும். 

அவ்வாறு கூட்டணி வரும்போது அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுலா பயணிகள் கடலில்பயணம் செய்ய ரூ. 8 கோடி செலவில் வாங்கப்பட்ட 2 சொகுசு படகுகள் 3 ½ ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை இயக்கப்படாமல் பாழாகி கொண்டிருக்கிறது. ரூ. 68 கோடிசெலவில் பேனா நினைவு சின்னம் வைத்துஎன்ன பயன் ? அதிமுக ஆட்சியில்திட்டங்கள் நிறைவேற்றப்படாத கிராமங்களேஇல்லை என்ற நிலைஇருந்துவந்தது.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

ஆனால் திமுக ஆட்சியில் எந்த கிராமத்திலும் அடிப்படை வசதி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாத கிராமங்கள் பற்றி சட்டசபையில் நான் குரல் எழுப்புவேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவது உறுதி. வருகிற தேர்தலில் அகஸ்தீஸ்வரம் அதிமுகவின் கோட்டை என்பதைநிருபிக்கும் வகையில் தொண்டர்கள் இன்றிலிருந்து இரவு -பகல் பாராது அயராது பாடுபட வேண்டும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..“எட்டப்பன் ஓபிஎஸ்சுக்கு ஒரே வழி.. ஸ்டாலினுக்கு நாட்டுல நடக்குறதே தெரியாது”.. அலறவிட்ட சி.வி சண்முகம் !!

click me!