தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி... திமுகவை உதறவிட்ட MLA தமிழ்ச் செல்வன்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 19, 2022, 4:17 PM IST

தேசிய அளவில் பாஜக எப்படி வேகமாக வளர்ந்ததோ, அதேபோல தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என மகாராஷ்டிர மாநிலம் சீயோன் கோலிவாடா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். 


தேசிய அளவில் பாஜக எப்படி வேகமாக வளர்ந்ததோ, அதேபோல தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என மகாராஷ்டிர மாநிலம் சீயோன் கோலிவாடா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். தமிழகத்தில் காலூன்ற பாஜக பகிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பாஜக பல்வேறு மாநிலங்களில் வலுவாக இருந்து வருகிறது. அதிலும் 2024-ல் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.  ஆனால் அந்த முயற்சிகள் பெரிய அளவில் எடுபடவில்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில் பாஜக தனது தனித்துவத்தை உருவாக்க வேண்டும்  என்ற முயற்சியில் பாஜக கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது. இந் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பாலிவிடுதியை பூர்வீகமாக கொண்ட தமிழ்ச்செல்வன் மகாராஷ்டிர மாநிலம் சீயோன் கோலிவாடா தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: ஐயோ... முதலில் நான் இந்தியனே இல்ல.. கோர்ட் வாசலில் நின்று கெத்து காட்டிய சீமான்.. அமித்ஷாவுக்கு பதிலடி

தற்போது இரண்டாவது முறையாக அத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வென்று பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் தனியார் தமிழ் நாளேட்டிற்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  என் தந்தை அடிப்படையில் கம்யூனிஸ்ட்காரர. அவர்தான் என அரசியல் குரு, எனது கிராமங்களுக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார், அதை பார்த்து தான் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. இளவயதிலேயே மும்பைக்கு வந்து தொழில் செய்து நிறைய சம்பாதித்தேன், என் அப்பாவைப் போலவே ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்தேன், பின்னர் பாஜக மீதும், அக்கட்சித் தலைவர்கள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:  “எட்டப்பன் ஓபிஎஸ்சுக்கு ஒரே வழி.. ஸ்டாலினுக்கு நாட்டுல நடக்குறதே தெரியாது”.. அலறவிட்ட சி.வி சண்முகம் !!

அதனால், அக்காட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன், அதிகாரிகளுக்கு இடையே, மக்களுக்குமிடையே ஒரு புரிதலை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கான காரியங்களை எளிதில் அதிகாரிகள் புரிந்து கொள்ள வழிவகை செய்துள்ளேன். இதன் மூலம் மக்களின் மனதில் இடம் பெற்றிருக்கிறேன். எனவே தொகுதி மாறி போட்டியிட வேண்டிய தேவை இல்லை, தற்போது தமிழகத்தில் முன்பு இருந்ததைக் காட்டிலும் பாஜக நல்லநிலையில் வளர்ந்துள்ளது, அண்ணாமலை பாஜக மாநில தலைவராக வந்தது முதல் கட்சியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது,  மக்கள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. திமுக அரசுக்கு எதிராக சிம்மசொப்பனமாக அண்ணாமலை இருக்கிறார். எல்லா பிரச்சினைகளையும் அவர் எடுத்து பேசுகிறார். 

அண்ணாமலையை தமிழக மக்கள் முழுமையாக அங்கீகரிக்கிறார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அண்ணாமலை முதலில் குரல் கொடுக்கிறார், அதனால் தற்போது ஆட்சியில் கொள்ளை அடிப்பது குறைந்துள்ளது, மொழியை வைத்து ஆட்சியை பிடிக்க முயற்சி நடக்கிறது. மொழியை யாரும் காப்பாற்ற தேவையில்லை, மனதில் இருந்தால் போதும். பிரதமராக இருந்த நரசிம்மராவ் 29 மொழிகள் தெரியும், அதற்காக தாய்மொழியை அவர் மறக்கவில்லை, தேசிய அளவில் பாஜகவுக்கு வெறும் 2 எம்பிக்கள் தான் இருந்தார்கள், ஆனால் அது நாடு முழுவதும் எப்படி விறுவிறுவென வளர்ந்ததோ, அதேபோல தமிழகத்திலும் பாஜக வேகமாக வளர்ந்து ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் உறுதிபட கூறினார்.  
 

click me!