ஹிந்துக்கள் எல்லாம் விபச்சாரியின் மகன்கள்.. சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா மீது வழக்கு? அடுத்தடுத்து அதிர்ச்சி

By Raghupati R  |  First Published Sep 19, 2022, 6:22 PM IST

ஆ.ராசா பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


திமுக பாராளுமன்ற உறுப்பினரும அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஆ. ராசா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கி கொள்வார் ஆ.ராசா பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்.

Latest Videos

undefined

மேலும் செய்திகளுக்கு..“எட்டப்பன் ஓபிஎஸ்சுக்கு ஒரே வழி.. ஸ்டாலினுக்கு நாட்டுல நடக்குறதே தெரியாது”.. அலறவிட்ட சி.வி சண்முகம் !!

ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். ஹிந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் ? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற  அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று பேசிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. 

ஆ. ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆ.ராசாவை கைது செய்ய கோரி காவல்நிலையித்தில் பாஜக மற்றும் இந்து முன்னனி அமைப்பினர்  புகார் மனு கொடுத்து வருகின்றர். அதிமுகவினரோ ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்து தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் தர்மபுரியில் வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் பயிற்சி நடைபெற்றது. 

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் சீனிவாசன், ‘ விஸ்வ ஹிந்து பரிஷத்தின், 60ம் ஆண்டு நிறைவு விழா, 2024ல் நடக்கவுள்ளது. அதற்குள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஆதரவாளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்கள் மனம் புண்படுத்தும்படி, தொடர்ந்து பேசி வரும், திமுக எம்.பி ராஜா மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுக முக்கிய பிரமுகர் சிக்னல் - அதிர்ச்சியில் எடப்பாடி

click me!