திமுக- காங்கிரசுடன் கூட்டணி இல்லை ? கமல்ஹாசன் அதிரடி விளக்கம் !!

By Selvanayagam PFirst Published Dec 16, 2018, 8:37 AM IST
Highlights

திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கமல் ஹாசன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை கமல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இன்று  மறைந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான  கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் மத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனும், ரஜினி மக்கள் மன்றம் கட்சியின் தலைவர் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென, கமல்ஹாசன், திமுக - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியுடன் சேர இருப்பதாக தகவல் வெளியானது.

 

இன்ற நடைபெறவுள்ள சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் செய்தி பரவியது.

இந்த தகவலை தனது ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.  இதுகுறித்து அவர், "மக்கள் நீதி மய்யம் @maiamofficial உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம்.

அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். #நாளைநமதே" என குறிப்பிட்டுள்ளார்.

click me!