கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் ராகுல் !! காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் !!

By Selvanayagam PFirst Published Dec 16, 2018, 7:38 AM IST
Highlights

சென்னையில் இன்று நடைபெறவுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலைதிறப்பு விழாவில் சோனியா காந்தியுடன்  ராகுல் காந்தியும் கலநது கொள்ள உள்ளதாக வெளியான தகவலால் காங்கிரஸ தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று  நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 3.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க, கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்திலும், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதலில் சோனியா காந்தி மட்டுமே வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த விழாவில் ராகுல் காந்தியும் கலந்து கொள்வது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் தற்போது வட மாநிங்களில் காங்கிரஸ் கட்சியுன் செல்வாக்கு கூடியுள்ள நிலையில் , சோனியா, ராகுல் இருவருமே விழாவில் கலந்து கொள்வதால் திமுகவும் இநதிய அளவில் தங்கள் கட்சிக்கு மாஸ் ஆகிவருவதாக அவர்கள் கருதுகின்றனர்.

click me!