2024 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Nov 21, 2022, 3:09 PM IST

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன் வடிவில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் பிரச்னை இருக்கக் கூடாது. அவர்கள் பேசி தீர்க்க வேண்டும். 


2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

சென்னையில் பாமக தலைவர் பேட்டியளிக்கையில்;- 2024 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார். 2026ல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம். சட்டப்பேரவை தேர்தலுக்கு தேவையான வியூகங்களை 2024ல் வகுப்போம் என தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கஞ்சா போதையில் தலைமை ஆசிரியரின் மண்டை உடைப்பு.. எங்கே போகிறது மாணவர் சமுதாயம்.. கதறும் அன்புமணி.!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன் வடிவில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் பிரச்னை இருக்கக் கூடாது. அவர்கள் பேசி தீர்க்க வேண்டும். 

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம். இரண்டாவது விமான நிலைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளில் ஆறு முறை பாமக அறிக்கை விட்டிருக்கிறது. ஏழை மக்கள் பயன்படுத்தக் கூடியது ரயில்வே மட்டும்தான். ரயில்வே துறை ஏழை மக்களை சார்ந்த கண்ணோட்டத்தில் இந்த துறை செயல்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு.. சண்டை போடாதீங்க.! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொன்ன ஐடியா !

click me!