குரல்வளையை நசுக்கும் திமுக..? தேசியவாதி கிஷோர் கே சாமி கைது..! பாஜக சட்ட உதவி செய்யும்..! .! அண்ணாமலை ஆவேசம்

Published : Nov 21, 2022, 02:59 PM IST
குரல்வளையை நசுக்கும் திமுக..? தேசியவாதி கிஷோர் கே சாமி கைது..! பாஜக சட்ட உதவி செய்யும்..! .! அண்ணாமலை ஆவேசம்

சுருக்கம்

சமூக வலை தளத்தில் அவதூறு கருத்து பரப்பிய குற்றச்சாட்டிற்காக பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை போலீசார் புதுச்சேரியில் கைது செய்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூகவலை தளத்தில் அவதூறு கருத்து

சமூகவலை தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியது தொடர்பாகவும், பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சையாக விமர்சித்த குற்றத்திற்காக ஏற்கனவே பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்த கிஷோர் கே சாமி கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக இஸ்லாமிய ஜமாத்தை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருத்தனர். இதனையடுத்து மழை பாதிப்புகளை முதலமைச்சர் பார்வையிட சென்றதை விமர்சித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கைலாசா மன்னனாக நித்யானந்தா..! காசி தமிழ் சங்கமத்திற்கு அழைக்காதது ஏன் ..? முரசொலி கிண்டல்

ஜாமின் மனு தள்ளபடி

இதனையடுத்து இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விசாரணைக்கு ஆஜராகும் படி போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகத நிலையில் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி முறையிட்டார். இந்த முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த கிஷோர் கே சாமியை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.  இந்த கைது சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

பாஜக சட்ட உதவி செய்யும்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிஷோர் கே சாமி அவர்களின் கைதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த திமுக அரசு தமிழக பாஜக பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கைது தொடர்பாக கிஷோர் கே சாமி அவர்களின் தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழக பாஜக செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்ததாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து..! கிஷோர் கே சாமியை அதிரடியாக கைது செய்த போலீஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு