குடியரசுதலைவரை சந்தித்து நிதிநிலை அறிக்கை நகலை வழங்கினார் நிர்மலா சீதாராமன். சற்று நேரத்தில் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2021, 10:41 AM IST
Highlights

இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார், நாடாளுமன்றம் வந்த அவர், முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து உரையாடினார் 

பரபரப்பு மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகைதந்துள்ளார்.  முன்னதாக அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து  மத்திய நிதிநிலை அறிக்கை நகலை வழங்கினார். 

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு பொருளாதார சலுகை, வருமான வரியில் தளர்வுகள் இருக்குமா என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதற்கான விடை இன்னும் சற்றுநேரத்தில் தெரியவரும். 

மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார், அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும்.  வழக்கமாக பெட்டியினுள் வைத்து பட்ஜெட் உரை தாள்கள் கொண்டுவரப்படும், ஆனால் இந்த முறை சிவப்பு நிற துணி கோப்பில் நிதி அமைச்சர் நிர்மலா பட்ஜெட் தாள்களை எடுத்து வந்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட  இருக்கிறது. எதிர்கட்சிகள் கூட்டத் தொடரின் துவக்கத்திலேயே பிரச்னை எழுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட்தாக்கல் மிகுந்த  சவால் நிறைந்ததாக இருக்கும் என தெரிகிறது. 

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது, மார்ச் 8ஆம்  தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், மொத்தம் 38 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் நிலை வருகிறது. குறிப்பாக,, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கப்படுமா?

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையிலும் நிதி ஒதுக்கப்படுமா? வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? வரி விகிதங்களில் மாற்றம் ஏற்படுமா? கொரோனா வைரஸ் நெருக்கடியால் நாடு பொருளாதார சரிவை சந்தித்துவரும் நிலையில் கூடுதல் வரி (செஸ்) விதிக்கப்படுமா எனப் பல்வேறு கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவைகளுக்கு இன்னும் சற்ற நேரத்தில் விடை கிடைக்க உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார், நாடாளுமன்றம் வந்த அவர், முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து உரையாடினார். அப்போது மத்திய நிதிநிலை அறிக்கை நகலை குடியரசு தலைவரிடம் அவர் வழங்கினார். 
 

click me!