பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா சீதாராமன்.. எதிர்பார்ப்புகளுக்கு சற்று நேரத்தில் விடை.

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2021, 10:26 AM IST
Highlights

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்துள்ளார். சிவப்பு நிற உறையில் பட்ஜெட் தாள்களை அவர் கொண்டுவந்தார். 

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்கிறார், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிறப்பு பொருளாதார சலுகை, வருமான வரியில் தளர்வுகள் இருக்குமா என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதற்கான விடை இன்னும் சற்றுநேரத்தில் தெரியவரும். 

மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார், அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும்.  வழக்கமாக பெட்டியினுள் வைத்து பட்ஜெட் உரை தாள்கள் கொண்டுவரப்படும், ஆனால் இந்த முறை சிவப்பு நிற துணி கோப்பில் நிதி அமைச்சர் நிர்மலா பட்ஜெட் தாள்களை எடுத்து வந்தார். முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. எதிர்கட்சிகள் கூட்டத் தொடரின் துவக்கத்திலேயே பிரச்னை எழுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட்தாக்கல் மிகுந்த  சவால் நிறைந்ததாக இருக்கும் என தெரிகிறது. 
 

click me!