பெண் பத்திரிக்கையாளரை , ''அடி போடி'' என திட்டிய நிர்மலா சீத்தாராமன் !! அதிர்ச்சியில் செய்தியாளர்கள் !!

Published : Sep 21, 2019, 09:34 PM IST
பெண் பத்திரிக்கையாளரை , ''அடி போடி'' என திட்டிய நிர்மலா சீத்தாராமன் !! அதிர்ச்சியில் செய்தியாளர்கள் !!

சுருக்கம்

கோவாவில் நேற்று நடைபெற்ற  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  அவர்கள்  கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் , ''அடி போடி'' என சலித்துக்கொண்டு  திட்டிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் இந்த சந்திப்பின் போது பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலளிக்காமல் அவரைப் பார்த்து , ''அடி போடி" என சலித்துக்கொண்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு கோவாவில் நடைபெற்றதால் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாடலும், கேள்வியும் கேட்கப்பட்டது. இதனால் அங்கே இருந்த பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசுபவர்களாகவும் இருந்தனர்.

இதனால் நிர்மலா சீதாராமன் தமிழில் சலித்துக் கொண்டு கூறிய வார்த்தைகள் யாருக்கும் புரியவில்லை.  ஆனால்  நிர்மலா சீத்தாராமன் பேசியதன் அர்த்ததை  பின்னர் தெரிந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின்  இரண்டாவது பெண் நிதியமைச்சர் என அனைவராலும் கொண்டாடப்பட்ட நிர்மலா சீதாராமன் செய்தியாளர் தனது கேள்வியைக் கேட்டு முடிக்கும் முன் ''அடி போடி'' என சலித்துக் கொண்டது பத்திரிகையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு சிலர் நிதி அமைச்சர் செல்லமாக கோபித்துக் கொண்டு சொன்ன வார்த்தைகள் இது. எனவே இதை பெரிது படுத்த தேவையில்லை என்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை