
இந்தியா -பாகிஸ்தான் போர், பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் ‘விஜய் திவாஸ்’ நாளில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்நிர்மலா சீதாராமன் அடித்த ‘சல்யூட்டால்’ சர்ச்சை வெடித்துள்ளது.
விஜய் திவாஸ்
இந்தியா-பாகிஸ்தான் போர், உள்ளிட்ட பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் உயிர் நீத்தவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விஜய் திவாஸ் நிகழ்ச்சி டெல்லி இந்தியா கேட் பகுதியில் கடந்த 16-ந்தேதி நடந்தது. இதில் முப்படைத் தளபதிகளும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
கீழ்நோக்கி
வழக்கமாக ராணுவ முறைப்படி, வலது உள்ளங்கை தெரியும்படி நெற்றியில் வைத்து ‘சல்யூட்’ செய்வதுதான் முறையாகும், அதுதான் மரியாதையாகும். ஆனால், 16-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில்,நிர்மலா சீதாராமன் கடற்படையினர் ‘சல்யூட்’ செய்துள்ளார். அதாவது, தனது வலது உள்ளங்கையை கீழ்நோக்கி வைத்து மரியாதை செய்துள்ளார்.
தெரிந்து நடந்ததா?
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஒருவர் ‘சல்யூட்’ அடிக்கத் தெரியாமல் இருக்கிறாரா? அல்லது ‘சல்யூட்’ அடிக்கும் முறை தெரிந்து வேண்டுமென்றே இதுபோன்று ராணுவ சல்யூட்டுக்குபதிலாக, கடற்படையின் ‘சல்யூட்’ அடித்தாரா? என்ற சர்ச்சை உருவாகியுள்ளது.
இதற்கு முன் பாதுகாப்பு துறையில் இருந்த ஏ.கே. அந்தோனி, மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லிஉள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வலது உள்ளங்கையை தெரியும் படி சல்யூட் அடித்து உள்ளனர்.
கேள்வி?
இப்போது நிர்மலா சீதாராமன் அடித்த சல்யூட் அவர் பாதுகாப்பு துறை குறித்து முழுமையாக அறிந்தவரா அல்லது அதன் சட்ட விதிமுறைகள் தெரியாமல் செயல்படுகிறாரா என்ற கேள்வியை உருவாக்கி இருக்கிறது.
கடற்படை சல்யூட்
பொதுவாக, கடற்படையில் ‘சல்யூட்’ என்பது, வலது உள்ளங்கை கீழ்நோக்கியும், முழங்கை வலதுபுறம் நேராக இருக்கும் வகையில் சல்யூட் செய்ய வேண்டும். முன்காலத்தில், கப்பலில் பணிபுரியும் வீரர்கள், கையில் அழுக்கு படிந்து இருக்கும் போது, உயர் அதிகாரிகள் வந்தால், அவர்களுக்கு சல்யூட் அடிக்கும் போது, அழுக்கு தெரியக்கூடாது , அது அவர்களை அவமானப்படுத்துவதாகும் என்பதற்காக உள்ளங்கை கீழ்நோக்கி வைத்து அடித்தனர்.
ராணுவ முறை
ராணுவ முறையில், வலது உள்ளங்கை தெரியும் படி நெற்றியில் வைத்து சல்யூட் அடிப்பது மரியாதையை காட்டுவதாகும். சல்யூட் செய்யும் போது விரல்கள் ஒன்று சேர்ந்து, நடுவிரல் கண்புருவத்தை தொட்டு இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
ராணுவ விளக்கத்தின்படி, உள்ளங்கை தெரியும்படி சல்யூட் செய்வது என்பது, தனது கையில் எந்தவிதமான ஆயுதங்களும் இல்லை என்பதை மற்ற நபர்களுக்கு தெரிவிக்கும் முறையாகும்.
விமானப்படை
இந்நிலையில், விமானப்படை வீரர்கள் சல்யூட் என்பது, வலது உள்ளங்கை பகுதியை 45 டிகிரி கீழ்நோக்கி, கையை லேசாக தூக்கியவாறு இருக்க வேண்டும். இந்த புதிய முறை கடந்த 2006ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.