அரியணை கனவில் பாஜக – காங்கிரஸ் கட்சிகள் !! குஜராத், இமாசலப்பிரதேச மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை !!!

Asianet News Tamil  
Published : Dec 18, 2017, 06:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
அரியணை கனவில் பாஜக – காங்கிரஸ் கட்சிகள் !! குஜராத், இமாசலப்பிரதேச மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை !!!

சுருக்கம்

today gujarat and himachal pradesh vote counting

குஜராத் மற்றும் இமாசலபிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கை ன்று நடைபெறுகிது. இன்று மாலைக்குள் அனைத்து முடிவுகளும் தெரியவரும். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இந்த தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கினறன.

182 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடந்தது. குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.. இதனால் இந்த முறை ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் தொடர்ந்து 3 மாதங்கள் குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.



மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவற்றை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தில் பட்டேல் பிரிவு மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக திகழும் இளம் தலைவர் ஹர்திக் பட்டேலின் பதிதார் அனமாத் அந்தோலன் சமிதி, சாதி அமைப்பு தலைவர்கள் அல்பேஷ் தாக்குர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோருடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இது அக்கட்சிக்கு சாதகமாக அமைந்து இருப்பதாக கூறப் படுகிறது.



அதேநேரம் பா.ஜனதாவும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அக்கட்சித்  தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். மோடியும் 34 இடங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் பேசினார்.

இந்த நிலையில் 2 கட்ட தேர்தல்களிலும் 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதையடுத்து 182 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இன்றும் சற்று நேரத்தில் எண்ணிக்கை தொடங்கவுள்ளது.



இதே போல் 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாசலபிரதேசத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி தேர்தல் நடந்தது.

ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், 2007-ம் ஆண்டுக்கு பிறகு கைப்பற்ற பாஜகவும் கடும் போட்டியில் இறங்கின. சிறிய மாநிலம் என்றாலும் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போட்டி போட்டு பிரசாரம் மேற்கொண்டனர். இங்கு நடந்த தேர்தலில் மொத்தம் 75.28 சதவீத ஓட்டுகள் பதிவானது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 35 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. கடந்த தேர்தலில் காங்கிரசில் 36 பேரும், பா.ஜனதாவில் 26 பேரும் வெற்றி பெற்று இருந்தனர்.



இந்த இரு மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு  எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று காலை 11 மணிக்குள் முன்னணி நிலவரம் முழுமையாக தெரிய வரும். அனைத்து முடிவுகளும் மாலை 5 மணிக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் 37 மையங்களிலும், இமாசலபிரதேசத்தில் 42 மையங்களிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!