டம்மியாக்கப்பட்ட இன்னசெண்ட் திவ்யா.. ஸ்டாலின் போடும் கணக்கு ..?

By Thanalakshmi VFirst Published Dec 2, 2021, 4:58 PM IST
Highlights

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசெண்ட் திவ்யா பணியிட மாற்றம், பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கபட்டுள்ளார்.
 

தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. நேற்று முன் தினம் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் இன்று மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது' என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். திமுக ஆட்சி வந்தவுடன், நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது என தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தது .இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியராக ஐ.ஏ.எஸ் அம்ரீத் நியமிக்கப்பட்டார். நீலகிரி ஆட்சியராக கூடுதல் பொறுப்பில் இருந்த கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், முன்னாள் ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவிற்கு பொறுப்புகள் ஏதும் வழங்கபடாமல் இருந்த நிலையில், தற்போது அவர் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தவர். நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுபேற்ற பிறகு சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தார். இவரது அதிரடி திட்டங்களுக்கு பொதுமக்களிடையே  பெரும் வரவேற்பு கிடைத்தது. 

தொடர்ந்து, யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவோடு இணைந்து ஆக்கிரமிப்பு செய்த ரிசார்ட்டுகளை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் சிறப்பாகவும் யாருக்கும் வளைந்து கொடுக்காமலும் செயல்பட்டார் என்று மக்களால் பாராட்டப்பட்டார்.  இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், ''உச்ச நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது'' என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதன்பின்னர், யானை வழித்தடங்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். 

இந்த வழக்கில் இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. அதில், ''நிர்வாகரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு சூழலியல் ஆர்வலர்கள் , அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வனபகுதிகளை பெரும் முதலாளிகளுக்கு தாரைவார்ப்பதற்காக தமிழக அரசு திட்டபோடுவதாகவும் குற்றச்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!