உனக்கு நடிப்பே வரல.. யாருன்னு தெரியாம ஓபிஎஸ் பேரனை திட்டி தீர்த்த இயக்குனர்.. பிறகு நடந்த தரமான சம்பவம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2021, 4:12 PM IST
Highlights

எனக்கு சால்வை போற்றினார். அவரது மகன் நடிப்பதை சிறிதுநேரம் பார்த்தார். பிறகு இப்படித்தான் நீங்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் அவன் நல்ல நடிகனாக வருவான் என கூறிவிட்டு சென்றார். 

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் பிரணவ் என்ற இளைஞர் நடித்துள்ளதாகவும், அவரை நடிப்பே வரவில்லை என தான் பலமுறை திட்டியதாகவும், பிறகுதான் அவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் பேரன் என்று அறிந்து தான் அதிர்ந்து போனதாகவும் அப்படத்தின் இயக்குனரும், சண்டை பயிற்சியாளருமான சில்வா தெரிவித்துள்ளார்.

இப்படித்தான் பல நேரங்களில் எதுவுமே தெரியாமல் தான் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம் என்றும் அவர் சுவாரசியமாக கூறியுள்ளார். ஏ.எல் விஜய் எழுதிய கதையை சண்டை பயிற்சியாளர் சில்வா இயக்கியுள்ள திரைப்படம் சித்திரை செவ்வானம். பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சண்டை இயக்குனராக சுமார் 250 க்கும் அதிகமான பல்வேறு மொழிப் படங்களில் பணிபுரிந்த ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா இப்படத்தின் அறிமுக இயக்குனராக களமிறங்கியுள்ளார். 

 

இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சமுத்திரக்கனி கூறுகையில், சித்திரை செவ்வானம் திரைப்படம் மிக சிறப்பான திரைப்படம். என் தம்பி பைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒரு நாள் வந்து என்னிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது என கூறி அதை சொன்னார். அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை, ஒரு அப்பா பொண்ணு இருவருக்குமிடையிலான உணர்வுபூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கைப் பயணம், அதில் நடக்கும் பிரச்சினைகள் தான் கதை என்றார். மனதை உருக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதை என்பதால் நான் அதை உடனே ஏற்றுக் கொண்டேன். பின்னர் அது மிக அற்புதமான படமாக உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சிறந்த படத்தில் என்னை இடம் பெற வைத்த தம்பி சில்வாவுக்கு நன்றி என அவர் கூறினார். அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய இயக்குனர் சில்வா, சண்டை பயிற்சி இயக்குனராக இருந்த என்னை திரை இயக்குனராக்க வேண்டுமென்று வெறித்தனமாக முயற்சிகளை மேற்கொண்டவர் ஏ.எல் விஜய் அவர்கள் தான்.

அடிக்கடி உங்களுக்குள் ஒரு இயக்குனர் இருக்கிறார் என்று சொல்லி சொல்லி என்னை  வளர்த்தார். இந்தப் படம் எடுத்து முடித்த பின்பு அதை திரையில் பார்த்துவிட்டு என்னால் கூட இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது என மனப்பூர்வமாக பாராட்டினர். அதேபோல, கதை சொன்னவுடன் உடனே ஏற்றுக் கொண்டு நடிக்க முன்வந்தவர் அண்ணன் சமுத்திரக்கனி அவர்கள். தொடர்ந்து என்னுடன் இருந்து தன் சொந்த படம் எடுப்பது போல என்னை இயக்கியவர் சமுத்திரகனி அவர்கள். இதேபோல் படத்தில் கதாநாயகி மற்றும் துணை நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்தனர். பல நேரங்களில் நான் தெரியாமல் வாயை விட்டு வம்பில் மாட்டிக் கொள்வது என் பழக்கம் எதற்காக இப்படி சொல்லுகிறேன் என்றால், பிரணவ் என்ற தம்பி இந்த படத்தில் நடித்துள்ளார். அவரை நான் அடிக்கடி என்னப்பா நடிக்கிற, நேரமாகுது என தொடர்ந்து கடிந்து கொண்டே இருப்பேன். ஒருநாள் அவர் தந்தை வந்தார்.

எனக்கு சால்வை போற்றினார். அவரது மகன் நடிப்பதை சிறிதுநேரம் பார்த்தார். பிறகு இப்படித்தான் நீங்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் அவன் நல்ல நடிகனாக வருவான் என கூறிவிட்டு சென்றார். பிறகுதான் பிரணவ் குறித்து நான் விசாரித்த போது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவர் முன்னாள் முதல்வர், தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பெயரன் எனக் கூறினார்கள். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனே பிரணவ்வை அழைத்து தம்பி இதை முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதா? என்ன பதறினேன். இவ்வாறு அவர் சுவரஸ்யம் தெரிவித்தார்.
 

click me!