மழை வெள்ளத்தை தொடர்ந்து சென்னை மக்களை நெருங்கி வரும் அடுத்த ஆபத்து! அலறும் அன்புமணி ராமதாஸ்.!

By vinoth kumar  |  First Published Dec 6, 2023, 11:29 AM IST

மிக்ஜம் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்காக சாத்தியக்கூறுகளே தென்படவில்லை.  


மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தொற்று நோயும் பரவினால் அதை மக்களால் தாங்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர் பாமக தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- மிக்ஜம் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிவதற்காக சாத்தியக்கூறுகளே தென்படவில்லை.  மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தோற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது. ஏற்கனவே மழை - வெள்ளத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில்,  தொற்று நோயும் பரவினால் அதை மக்களால் தாங்க முடியாது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- டெட்ரா பாக்கெட்டில் மட்டும் மது விற்பனை அமல் செஞ்சீங்க! அப்புறம் இதுதான் நடக்கும்! அரசை எச்சரிக்கும் அன்புமணி!

தமிழ்நாட்டில் ஏற்கனவே இன்ஃபுளூயன்சா காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகின்றன. அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பிக் கிடக்கின்றன.  இந்த நோய்களும் மழைக்கால தொற்று நோய்களும்  சேர்ந்து  கொண்டால், நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகி விடும். 

இந்த ஆபத்து வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை  தமிழக அரசு உணர வேண்டும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் தேங்கிக் கிடந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

இதையும் படிங்க;-  3 நாட்களாகியும் வடியாத வெள்ளம்..தோல்வி அடைந்த தமிழக அரசு- குடும்பத்துக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்குக- ராமதாஸ்

சென்னையின் அனைத்துத் தெருக்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

click me!