தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இவர்தான் !! அடித்துச் சொல்லும் இந்தியா டு டே கருத்துக் கணிப்பு ….

By Selvanayagam PFirst Published Oct 27, 2018, 7:07 AM IST
Highlights

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றால் அடுத்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தான் வருவார் என இந்தியாடுடே 'டிவி', மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா,மற்றும் பி.எஸ்.. இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் தற்போது ஆளும் அதிமுகவில் கடும் குழப்பமே நிலவுகிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எடப்பாடி அரசுக்கு வெற்றி கிடைத்திருந்தாலும், அதிமுக அரசு தற்போது மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டு வருகிறது.

தற்போது காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்று அதில் அதிமுக ஜெயித்தால்தான் இந்த அரசு தொடர முடியும். இலலை என்றால் எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது

தற்போது தமிழகத்தில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே, 2 தொகுதிகள் காலியாக உள்ளன. மொத்தம், 20 சட்டசபை தொகுதிகளுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தமிழகம் மினி சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தால் அடுத்த முதலமைச்சராக யார் வருவார் என்ற கருத்து கணிப்பில் பரலபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக இந்தியாடுடே 'டிவி', மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா,மற்றும் பி.எஸ்.இ. இணைந்து நடத்திய 39 லோக்சபா தொகுதிகளில் 14 ஆயிரத்து 820 பேர்களிடம் கருத்துகணிப்பு நடத்தியது.

இதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளை தவிர, தற்போது அரசியலில் குதித்துள்ள ரஜினி,கமல் உட்பட அடுத்த முதலமைச்சராக  வர வாய்ப்புள்ளவர்கள் பெற்றுள்ள சதவீதம் குறித்த கருத்து கணிப்பு வெளியாகியுள்ளன. அதில்

ஸ்டாலின் …. …..      …. 41 %

எடப்பாடி பழனிசாமி….    10 %

கமல்ஹாசன்        … .  8 %

அன்புமணி           …   7 %

ரஜினிகாந்த்          …   6 %

ஓபிஎஸ்              …. 6 %

டி.டி.வி.தினகரன்     ….   6 %

விஜயகாந்த்          …   5 %

மேலும் அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு தி.மு.க.வுக்கு தான் சாதகம் எனவும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது மக்களுக்கு, 54 சதவீத அதிருப்தி எனவும், 18 சதவீதம் திருப்தி எனவும் அந்த கருத்து தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!