அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச ரேசன் பொருட்கள்...?? பசி பட்டினியை தடுக்க கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2020, 6:30 PM IST
Highlights

இதன் காரணமாக பதுக்கல்களும், விலைவாசி உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.மேலும் அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்கின்ற நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர்.  எனவே மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குடும்ப அட்டைதாரர்களுக்கு மேலும் மூன்று மாத காலத்திற்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் விலையில்லாமல் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அச்சங்க தலைவர் கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :- கொரோனா தோற்று உலகையே  புரட்டிப் போட்டுள்ளது. இதில் இந்தியா விதிவிலக்கல்ல. தொற்று பரவியதன் காரணமாக நமது நாட்டிலும் மார்ச் மாதம் 24 தொடங்கி ஊரடங்கு என்பது நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாரவுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது. தற்போது மத்திய அரசு அத்தியாவசிய தேவையான உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்கி விட்டது. 

மேலும் அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசும் அதற்கான அரசாணை வெளியிட்டு முன்னோட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தினால் வெளிமாநில தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டாலும், இந்தியா முழுதும் ஒரே சீரான நிலையில் பொது விநியோக திட்டம் என்பது இல்லை. தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் அவ்வாறான திட்டம் இல்லை. மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் புலம் பெயர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் உள்ள திட்டத்தின் போல் வழங்கப்படுமா அல்லது உணவு தானியங்களுக்காண விலை  நிர்ணயிக்கப்படுமா என்பது தெளிவாகவில்லை. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து வெளிமாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு விலை இல்லாமல் வழங்கப்படுமா என்பதும் தெளிவாக்கப்படவில்லை.நாடு முழுவதும் தற்போது உள்ள குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. 

புலம்பெயர்ந்தவர்கள் குடும்பம் ஓரிடத்திலும் குடும்பத்தலைவர் ஓரிடத்திலும் இருக்க நேரிடும் பட்சத்தில் அவர்களுக்கான உணவு தானியம் எவ்வாறு வழங்கப்படும். புலம்பெயற்  தொழிலாளிகள் ஓரிடத்திலேயே இருக்க வாய்ப்பில்லை மாதம்தோறும் இடம் விட்டு இடம் நகரும் பட்சத்தில் அவர்களுக்கான ஒதுக்கீடு எவ்வாறு உறுதிப்படுத்துவது, அதற்கான மானியத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது போன்ற வினாக்களுக்கு முழுமையாக விடை தெரியாமல் இத்திட்டத்தை நிறைவேற்றுவது கடினம். பசியால் உயிரிழப்பு?: 
ஒருபுறம் விவசாயத்தை  சீரழித்து, மற்றொருபுறம் பொது விநியோகத் திட்டத்தையும் முடக்குவது மக்களை மீண்டும் பசிப்பிணியில் தள்ளிவிடும் என்பதை அரசு உணராமல் உள்ளது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் உயிரிழப்பை காட்டிலும் பசியால் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐபிஇ குளோபல் பொருளாதார ஆலோசனை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அஸ்வஜித் சிங் கூறியிருப்பதை புறக்கணிக்க முடியாது. 

கொரோன தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்கின்ற நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர். மேலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை என்பது கூடுதலாகுமே தவிர குறைவதற்கான வாய்ப்பில்லை. எனவே மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குடும்ப அட்டைதாரர்களுக்கு மேலும் மூன்று மாத காலத்திற்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவது அவசியம். மக்களின் பசிப்பிணியை போக்க உணவு தானியங்கள் வழங்குவதை உறுதி செய்யாமல் பட்டினி உயிரிழப்புக்களை தடுக்க முடியாது.என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!