திடீரென பின்வாங்கிய தமிமுன் அன்சாரி..! ஒதுங்கிய முக்கிய கட்சி..! முதுகில் குத்தப்பட்ட இஸ்லாமியர்கள்!

By Selva KathirFirst Published Feb 20, 2020, 5:09 PM IST
Highlights

சிஏஏவிற்கு எதிராக அலைகடலென திரண்ட இஸ்லாமியர்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற நிலையில் திடீரென அந்த முடிவு கைவிடப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சிஏஏவுக்கு எதிராக திடீரென கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் போராட்டம் தீவிரமானது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏழாவது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் பிரதான கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்று வந்தாலும் அதனை தமிழக அரசு பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால் சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகையிடப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தன. குறிப்பாக சென்னையில் உள்ள ஜமாத்துகள் மூலமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதன் பின்னணியில் முக்கியமான ஒரு கட்சி இருப்பதை கடந்த வாரமே உளவுத்துறை மோப்பம் பிடித்தது. இதனால் அந்த கட்சி இந்த போராட்ட விவகாரத்தில் பட்டும் படாமல் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருகிறது.

அதே சமயத்தில் சட்டப்பேரவயை நோக்கி பேரணி மற்றும் முற்றுகை எனும் இஸ்லாமியர்களின் அறிவிப்பின் பின்னணியில் அந்த கட்சியின் அரசியல் இருந்துள்ளது. மேலும் ஜமாத்தில் உள்ளவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் போராட்டம் என்று வெளியே வரமாட்டார்கள். ஆனால் முக்கியமான அரசியல் கட்சி பின்னணியில் உள்ளது தங்களுக்க ஆதரவாக அவர்களும் களம் இறங்குவார்கள் என்கிற நம்பிக்கையில் ஜமாத்துகள் போராட்டத்தை முன்னெடுக்க ஒப்புக் கொண்டன. தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத், தமிமுன் அன்சாரியின் கட்சி, ஜவாஹிருல்லாவின் கட்சியும் இந்த போராட்டத்தில் தீவிரம் காட்டின. இந்த சூழலில் தான் வராகி என்பவர் கோட்டையை நோக்கிய பேரணிக்கு தடை பெற்றார். ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு தான் அந்த முக்கிய கட்சி கழன்று கொண்டதாக சொல்கிறார்கள். நேற்று வரை பேரணியில் அந்த கட்சியினரும் கலந்து கொள்வார்கள் என்றே வாக்குறுதி அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக அக்கட்சியின் மேலிடம் சென்னையில் உள்ள தங்கள் மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து சில அறிவுரைகளை வழங்கியது.

ஆனால் தடை என்று உயர்நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து அந்த கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் கொடுத்த வாக்குறுதிக்காக கட்சியின் 2ம் கட்ட தலைவரை கூட இல்லாமம் 3ம் கட்ட தலைவரை அனுப்பியது அந்த கட்சி. முக்கிய கட்சி திடீரென பின்வாங்கியதால் கோட்டையை நோக்கி பேரணி என்கிற எண்ணத்தை கைவிட ஜமாத்தை சேர்ந்த சிலர் முடிவு செய்ததாக சொல்கிறார்கள். அந்த சமயத்தில் திடீரென எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, 24 மணி நேரத்திற்குள் சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற வேண்டும் என்கிற நிபந்தனையுடன் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். ஜமாத்தார்களுடன் கலந்து பேசியே இந்த முடிவை அறிவித்ததாக அவர் விளக்கம் சொன்னாலும், அலைகடலென இஸ்லாமியர்கள் திரண்ட நிலையில் திடீரென போலீசாரே எதிர்பார்க்காத வகையில் தமிமுன் அன்சாரி போராட்டத்தை முடித்து வைத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் அவரது அதிமுக தொடர்பு ஏதேனும் இருக்குமோ என்று அவருக்கு எதிராக அரசியல் செய்யும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆராய ஆரம்பித்துள்ளனர்.

click me!