பாஜகவின் பழிகளையும் சேர்த்து சுமக்கிறது அதிமுக...!! வண்ணாரபேட்டையில் எரிமலையாய் வெடித்த தனியரசு...!!

Published : Feb 20, 2020, 05:04 PM ISTUpdated : Feb 20, 2020, 05:07 PM IST
பாஜகவின் பழிகளையும் சேர்த்து சுமக்கிறது அதிமுக...!!  வண்ணாரபேட்டையில் எரிமலையாய் வெடித்த தனியரசு...!!

சுருக்கம்

சென்னையில் வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் தேசிய குடியுரிமை  சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.  இதில்  பங்கேற்ற தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு  மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட அனுமதிக்க மாட்டோம் என சென்னை வண்ணாரப்பைட்டையில் நடந்து வரும்  போராட்ட களத்தில் தனியரசு எம்எல்ஏ ஆவேசமாக கூறியுள்ளார்.  சென்னையில் வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் தேசிய குடியுரிமை  சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.  இதில்  பங்கேற்ற தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு  மக்கள் மத்தியில் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர்,   பாஜக உள்ளிட்ட மதவெறி குழுக்களின்  அரசியல் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன், மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட என்றும்  அனுமதிக்க மாட்டோம் என சூளுரைத்தார்,  தமிழக அரசு குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதே நல்லது எனவும் தனியரசு கேட்டுகொன்றார்.  பாஜகவோடு கூட்டணி  வைத்த காரணத்தால் அதிமுக அரசு  பல பழிகளையும் சுமக்கிறது என சாடினார்.

 

பாஜகாவால் அதிமுக தேவையில்லா சுமைகளையும் சுமப்பதாக தனியரசு கூறினார். பிறகு, வண்ணாரப்பேட்டை போராட்ட களத்தில் , அங்கு குழுமியிருந்த இந்து சமுதாய சகோதரிகளை அழைத்து அவர்களின் பொது நல அக்கறையை மனம் திறந்து பாராட்டியதோடு , இப்படி தான் நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என கூறினார். அப்போது மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ உள்ளிட்டோரும்  உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!