கொரோனாவுக்கு புதிய தடுப்பு மருந்து... இந்தியாவில் ஒரு டோசின் விலை ரூ.59,750..!

By Thiraviaraj RMFirst Published May 25, 2021, 1:57 PM IST
Highlights

 விலை ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு டோசின் விலை ரூ.59,750 ஆகும்.

கொரோனா எதிரான புதிய தடுப்பு மருந்தினை ரோச் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், ஒரு டோசின் விலை ரூ.59,750 ஆக நிர்ணயம் செய்துள்ளது.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ரோச் இந்தியா, கொரோனாவுக்கு எதிரான மருந்து ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. ரோச்சின் ஆன்டிபாடி காக்டெயில் என அழைக்கப்படும் இந்த மருந்தை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து இந்த மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மருந்தை பிரபல மருந்து நிறுவனமான சிப்லா நாடு முழுவதும் வினியோகம் செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆன்டிபாடி காக்டெயில் மருந்து, லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் என கூறியுள்ள சிப்லா நிறுவனம், இதன் மூலம் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கும் தேவை குறைவதாகவும், உயிரிழப்பு 70 சதவீதம் வரை குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளது. இரண்டு டோஸ்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டை 2 நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு டோசின் விலை ரூ.59,750 ஆகும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு இந்த ஆன்டிபாடி காக்டெயில் மருந்து தான் செலுத்தப்பட்டது.

click me!