கமல் கட்சிக்கு புது டி.வி ரெடி... அதிகாரப்பூர்வமாக அறிவித்த பெரும் கோடீஸ்வர துணை தலைவர்..!

By Thiraviaraj RMFirst Published Aug 30, 2019, 1:59 PM IST
Highlights

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென ஒரு தொலைக்காட்சியை வாங்கி இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 
 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென ஒரு தொலைக்காட்சியை வாங்கி இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

 

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென ஒரு தனி டிவி சேனல் வாங்க வேண்டும் என கட்சி ஆரம்பித்தது முதலே கமல் ஹாசன் விரும்பி வந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கால அவகாசம் இல்லாததால் ஒத்திப்போட்டனர். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி செயலில் இறங்கி உள்ளது. புதிய சேனலுக்கு அப்ளை செய்தால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்பதால் ‘வெற்றி’ என்னும் அர்த்தம் கொண்ட டிவியிடம் ஒப்பந்தம் கேட்டனர். காரணம் கமல் ஹாசன் வீட்டின் அருகில் இந்த தொலைக்காட்சி மைலாப்பூர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

 

ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில் சமீபகாலமாக விற்பனைக்கு வருவதாக பேசிக் கொள்ளப்படும் முக்கிய நதியின் பெயரை கொண்ட அந்த செய்தி சேனலை மக்கள் நீதிமய்யம் வாங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. லைசென்ஸ் மட்டுமின்றி கட்டடத்துடன் அந்த செய்தி சேனலை வாங்கி இருக்கிறார்கள். 

இந்த செய்தி சேனலை மக்கள் நீதி மைய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் சொந்த செலவில் வாங்கி உள்ளார். கோவையை சேர்ந்த மருத்துவரான அவர் தேர்தல் நேரத்தில் சொத்துக் கணக்காக 160 கோடி ரூபாயை கணக்கு காட்டி இருந்தார். ஆகையால் கமல்ஹாசன் அவரையே அந்த சேனலை வாங்கி நிர்வகிக்கும் பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறார்.

இது குறித்து பாளையம்கோட்டையில் பேசிய மகேந்திரன், ’’6 மாத காலத்திற்குள் மக்கள் நீதி மய்யத்திற்கென புதிய சேனல் துவங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக நவம்பர் 7-ம் தேதி முதல் கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். 5 அல்லது 6 பழைய நிர்வாகிகளே கட்சியை விட்டு விலகி உள்ளனர். அக்டோபர் 1 முதல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட உள்ளனர்’’ என அவர் தெரிவித்தார். 

click me!