குஷ்புவுக்கு புதிய பதவி... பாஜக வெளியிட்ட முக்கியப்பட்டியல்..!

Published : Oct 07, 2021, 03:45 PM IST
குஷ்புவுக்கு புதிய பதவி... பாஜக வெளியிட்ட முக்கியப்பட்டியல்..!

சுருக்கம்

திமுகவில் இணைந்து, காங்கிரஸ் கட்சிக்கு தாவி, பாஜகவிற்கு மாறி விரக்தியில் இருந்த நடிகை குஷ்புவுக்கு புதிய பதவியை வழங்கி உள்ளது பாஜக.   


திமுகவில் இணைந்து, காங்கிரஸ் கட்சிக்கு தாவி, பாஜகவிற்கு மாறி விரக்தியில் இருந்த நடிகை குஷ்புவுக்கு புதிய பதவியை வழங்கி உள்ளது பாஜக. 

கடந்த தேர்தலில், சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதியில் பா.ஜ.கனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் நடிகை குஷ்பு. முன்னணி நட்சத்திரமாக இருப்பதால் அவருக்கு பாஜகவில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதனை எதிர்பார்த்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அப்போதைய மாநில தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

குஷ்புவை போலவே தோல்வியை தழுவிய அண்ணாமலைக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல குஷ்புவுக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு எந்தக் கூடுதல் பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது  குஷ்புவுக்கு புதிய பொறுப்பாக சிறப்பு அழைப்பாளர் என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பதவி எதுவும் இல்லாமல் இருந்த எச்.ராஜாவுக்கும் சிறப்பு அழைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பவர்கள் கட்சியின் தேசிய அளவில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பதவி எதுவும் இல்லாமல் இருந்தார். இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வரிசையில் அவரும் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னர் ஆக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் பொன். ராதாகிருஷ்ணன் கட்சி பணியில் ஈடுபடுவதையே விரும்பினார். எனவே அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்