சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி. DGP அலுவலகத்தில் தீக்களிக்க முயற்சி. ரவுடி படப்பை குணா மீது புகார்

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2021, 3:32 PM IST
Highlights

மனைவி சசிகலா மூலம் வரவேண்டிய சொத்துக்களை, தாங்கள் சாதி மறுப்பு திருமணத்தை செய்து கொண்டதை காரணம் காட்டி, மணிமங்கலம் சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகிகள் வாசு மற்றும் சங்கர் ஆகியோரும், ரவுடி படப்பை குணவுடன் சேர்ந்து மனைவிக்கு சேர வேண்டிந சொத்துக்களை அபகரித்ததாக வடக்கு மண்டல ஐ ஜியிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். 

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் சொத்துக்களை அபகரித்து கொலை செய்ய முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகம் முன்பு  குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை சேர்ந்தவர் பிரபாகரன். மணிமங்கலம் சேத்துப்பட்டை சேர்ந்த சசிகலா என்பவரை 2012 ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பு பிரபாகரன் குடும்பத்தோடு திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

டிஜிபி அலுவலக வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற காவல் துறையினர் உடனடியாக பிரபாகரன் வைத்திருந்த கெரோசின் பாட்டிலை பறித்து தடுத்துள்ளனர். விசாரணை செய்ததில் பிரபாகரனின்  மனைவி சசிகலா மூலம் வரவேண்டிய சொத்துக்களை, தாங்கள் சாதி மறுப்பு திருமணத்தை செய்து கொண்டதை காரணம் காட்டி, மணிமங்கலம் சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகிகள் வாசு மற்றும் சங்கர் ஆகியோரும், ரவுடி படப்பை குணவுடன் சேர்ந்து மனைவிக்கு சேர வேண்டிந சொத்துக்களை அபகரித்ததாக வடக்கு மண்டல ஐ ஜியிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின் ஸ்ரீபெரும்பதூர் ஏ.எஸ் பியிடம் புகார் அளித்தும், புகாரின் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

ரவுடி படப்பை குணா மற்றும் வாசு, சங்கர் ,பூபதி ஆகியோர் தன்னையும் தன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். உயிருக்கு பயந்து  இரண்டு குழந்தைகளோடு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும்  தெரிவித்துள்ளார். தன்னை எப்படியும் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், தன் உயிரை டிஜிபி அலுவலகம் முன்பு போகட்டும் என தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிஜிபி அலுவலகத்தில் பிரபாகரனின் புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

click me!