தமிழகத்தை சேர்ந்த குஷ்பு, ஹெச்.ராஜாவுக்கு தேசிய அளவில் முக்கிய பதவி.. பாஜக தலைமை அதிரடி..!

Published : Oct 07, 2021, 03:33 PM IST
தமிழகத்தை சேர்ந்த குஷ்பு, ஹெச்.ராஜாவுக்கு தேசிய அளவில் முக்கிய பதவி.. பாஜக தலைமை அதிரடி..!

சுருக்கம்

தேசிய சிறப்பு அழைப்பாளராக நியமித்துள்ளதற்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இது எனக்கு மிகவும் பெருமையான தருணம்" என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராக நடிகை குஷ்பு, ஹெச்.ராஜாவுக்கு ஆகியோருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. 

பாஜகவின் தேசிய செயற்குழுவில் நரேந்திர மோடி, மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, பியூஷ் கோயல் உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், இக்குழுவுக்கு 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி வழங்கப்படாமல் அதிருப்தியில் இருந்த குஷ்பு தேசிய அளவில் பதவி வழங்கப்பட்டு சரிகட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேசிய சிறப்பு அழைப்பாளராக நியமித்துள்ளதற்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இது எனக்கு மிகவும் பெருமையான தருணம்" என பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!