கருணாநிதி புகழ் பாடும் புதிய இணையதளம்... மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

By Asianet TamilFirst Published Aug 9, 2019, 8:20 AM IST
Highlights

இந்த இணையத்தில் கருணாநிதியின் சாதனைகள், படைப்புகள், உரைகள், மேடைப் பேச்சுகள், புகைப்படங்கள், காணொளிகள் இடம் பெற்றுள்ளன. கருணாநிதியின் புகழ் பரப்பும் கருவூலமாக இதைப் பயன்படுத்த திமுக முடிவு செய்துள்ளது.

மறைந்த திமுக முன்னாள் தலைவரும் முன்னள் முதல்வருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, கருணாநிதியின் புகழ் பாடும் புதிய இணையதளத்தை திமுக தொடங்கியிருக்கிறது.
மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 7 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி அமைதிப் பேரணி, முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலைத் திறப்பு  விழா நடைபெற்றது. கருணாநிதி சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்தார். இந்நிலையில், கருணாநிதியின் முதல் நினைவு நாளையொட்டி, அவருடைய புகழ் பாடும் வகையில் அவரைப் பற்றிய வரலாறு அடங்கிய புதிய இணையதளம் தொடங்கும் பணிகள் நடைபெற்றுவந்தன.


அந்தப் பணிகள் முடிவுற்ற நிலையில்,  www.kalaignar.dmk.in அந்த இணையதளத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த இணையத்தில் கருணாநிதியின் சாதனைகள், படைப்புகள், உரைகள், மேடைப் பேச்சுகள், புகைப்படங்கள், காணொளிகள் இடம் பெற்றுள்ளன. கருணாநிதியின் புகழ் பரப்பும் கருவூலமாக இதைப் பயன்படுத்த திமுக முடிவு செய்துள்ளது.

click me!