தொடங்கியது வாக்கு எண்ணிக்கை !! வேலூர் கோட்டை யாருக்கு ?

Published : Aug 09, 2019, 08:01 AM IST
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை !! வேலூர் கோட்டை யாருக்கு ?

சுருக்கம்

கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்லில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக . சார்பில் கதிர்ஆனந்த் மற்றும் , நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம்  28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் தற்போது   எண்ணப்பட்டு வருகிறது. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்வைக்கப்பட்டிருந்தன..

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள சீல் அகற்றப்பட்டு அதனை எண்ண அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் அடுத்தடுத்து தெரிய வரும். இன்று பிறப்கலுக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு அதிர்ச்சி... இதுதான் கடைசி சான்ஸ்... விஜயதாரணி எடுத்த பகீர் முடிவு..!
காத்து வாங்கிய காங்கிரஸ் மீட்டிங்.. விஜய்க்கு வாய்ஸ் கொடுத்த எம்.பி.க்கள் டோட்டல் எஸ்கேப்.. அப்போ அதானா?