நெல்லை கண்ணன் மிக மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

By Thiraviaraj RMFirst Published Sep 27, 2019, 3:18 PM IST
Highlights

மூச்சுத்திணறல் காரணமாக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிக மிக ஆபத்தான கட்டத்தை அடுத்து உடல் நலம் தேறி வருகிறார். 
 

பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன்  காமராசர், கண்ணதாசன் உள்ளிட்ட 1970களில் தொடங்கி  முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர்.

நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் நெல்லைக்கண்ணன் தனது உடல்நலம் குறித்து தனது முகநூல் பக்கத்தில், ’’26ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனே கேலக்ஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மிக மிக ஆபத்தான நிலை அனைவருமே அழ அரம்பித்து விட்டனர்.  எங்கள் ஊர் பிரபல மருத்துவர்கள் அனைவரும் சொல்லுவதே உண்மையாயிற்று.

என் அன்னை காந்திமதி தன் பிள்ளையை இழக்கச் சம்மதிக்கவில்லை இன்னும் இரண்டு நாள் இருந்து விட்டுச் செல்ல வேண்டும் என மருத்துவர் சுபானி கடிந்து கொண்டார். நான் இன்று கோயம்புத்தூரில் இருக்க வேண்டுமே மிகச் சிறந்த இருதய மருத்துவ நண்பர் தமிழிலேயே உரையாடல்கள் அனைத்தையும் நடத்துகின்றார். அவர் தமிழுக்காகவும் அன்பிற்காகவுமே அவரை இனி அடிக்கடிச் சந்திக்கப் போவேன்’’ என்று தெரிவித்து தான் குணமடைந்ததையும் அவர் தெரிவித்துள்ளார். 

click me!