விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.... திமுக எடுத்த அதிரடி முடிவு... வன்னிய பிரதிநிதிகளுக்கு வாய்த்த திடீர் அதிஷ்டம்..!

By vinoth kumarFirst Published Sep 27, 2019, 12:44 PM IST
Highlights

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக- திமுக நேரடியாக மோத உள்ளதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதுவரை கண்டுகொள்ளாத இருந்த வன்னியர்களுக்கு முக்கியத்தும் அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக- திமுக நேரடியாக மோத உள்ளதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதுவரை கண்டுகொள்ளாத இருந்த வன்னியர்களுக்கு முக்கியத்தும் அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட 11 தொகுதிகைள உள்ளடக்கியது. இதில், 7 சட்டப்பேரவை தொகுதியில் திமுகவும், 4 அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. அப்படி இருந்த போதிலும் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக, தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை தி.மு.க.,வில் அசைக்க முடியாத மாவட்ட செயலராக செஞ்சி ராமச்சந்திரன் வலம் வந்தார். அதன்பிறகு, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் மகன் முகையூர் சம்பத் மாவட்ட செயலாக நியமிக்கப்பட்டார். இறுதியில், அமைச்சராக இருந்த பொன்முடியிடம், மாவட்ட செயலர் பதவியை சம்பத் பறிகொடுத்தார். தமிழகம் முழுவதும், கூடுதலாக தி.மு.க.,வில் மாவட்ட செயலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 

அப்போது, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலராக முன்னாள் அமைச்சர் பொன்முடி, வடக்கு மாவட்ட செயலராக செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான், தெற்கு மாவட்ட செயலராக முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கன்னி தேர்வு செய்யப்பட்டனர். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் பொன்முடியை எதிர்த்து. யாரும் மாவட்ட செயலர் பதவிக்கு போட்டியிடவில்லை. இருந்தாலும், எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த புஷ்பராஜ் எந்த பதவியும் இன்றி, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். 

விழுப்புரம் நகரமன்ற சேர்மனாக இரண்டு முறையும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி வகித்து, தற்போது தலைமை தீர்மானக்குழு உறுப்பினராக உள்ளவர் முன்னாள் சேர்மன் ஜனகராஜ். தீவிர கட்சி பாணியாற்றியும், இவருக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. இதனால், இவரும் உற்சாகமின்றி 'அப்செட்' இருந்து வருகிறார். இதேபோல், ஒன்றிய சேர்மன், ஒன்றிய செயலர் பதவி வகித்து, தற்போது மாவட்ட பொருளாளராக உள்ள புகழேந்திக்கு, 3 முறை சீட் கேட்டும் வழங்கவில்லை என்ற அதிருப்தி நிலவியது. இதனை சரிகட்டி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், கட்சியில் 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விழுப்பும் மாவட்டம் திமுகவின் கோட்டையாக கருதப்பட்டாலும் கோஷ்டி பூசல் காரணமாக கட்சி கடுமையான சோதனைக்கு தயாராகி வருகிறது. இப்பகுதியில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும், மாவட்ட செயலருடன் கருத்து வேறுபாடு கொண்டு செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் எம்.எம்.ஏ.,க்கள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு, கட்சி நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

வன்னியர்கள் பலம் செஞ்சி, திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட தொகுதிகளில், வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் வன்னியர்களின் ஓட்டு வங்கி உள்ளது. இங்கு தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்தும், இவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி சரிகட்ட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!