மோடி, அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு... லாட்ஜில் பதுங்கியிருந்த நெல்லை கண்ணனை அலேக்காக தூக்கிய போலீஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 01, 2020, 10:49 PM ISTUpdated : Jan 01, 2020, 11:00 PM IST
மோடி, அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு... லாட்ஜில் பதுங்கியிருந்த நெல்லை கண்ணனை அலேக்காக தூக்கிய போலீஸ்...!

சுருக்கம்

இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பதுங்கியிருந்த நெல்லை கண்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.   

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அந்த கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன் அமித் ஷாவை குறிப்பிட்டு "அவரது ஜோலியை நீங்கள்லாம் முடிச்சுடுவீங்கன்னு" நெனச்சேன், ஆனா ஒண்ணும் செய்யாம இருக்கீங்களே என்று, இஸ்லாமியர்களை கொலைக்காரர்கள் என்பது போன்றும், கொலைக்காரர்களான நீங்கள் ஏன் இன்னும் அவர்களை கொலை செய்யாமல் இருக்கின்றீர்கள் என்பது போன்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்த நெல்லை கண்ணன் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து நெல்லை நகர காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே அவரை கைது செய்ய காவல்துறை சற்று தயக்கம் காட்டியது. 

இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதில் எச்.ராஜா. சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இனியும் தாமதித்தால் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்று எண்ணிய காவல்துறையினர் நெல்லை கண்ணனை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பதுங்கியிருந்த நெல்லை கண்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

'இந்தியாவில் கால் வைத்தால்'.. KKR வங்கதேச வீரருக்கு பாஜக மிரட்டல்.. ஷாருக்கான் தேசத் துரோகி.. விமர்சனம்!
இப்படியே போனால் காங்கிரஸ் அழிந்து விடும்.. தலைமை வேஸ்ட்.. ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ஜோதிமணி!