ஆப்ரேஷன் சக்சஸ்... நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு ஹெச். ராஜா ஹேப்பி ட்வீட்!

Published : Jan 01, 2020, 09:50 PM IST
ஆப்ரேஷன் சக்சஸ்... நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு ஹெச். ராஜா ஹேப்பி ட்வீட்!

சுருக்கம்

  "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட தாமரை சொந்தங்கள், இந்து இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி கலந்த வாழ்த்துகளை உவகையோடு உரித்தாக்குகிறேன் ..தேசமும், தமிழகமும் காக்க நம் தர்ம போராட்டம் தொடரும்! பாரத் மாதா கீ ஜெய்!” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துள்ளார்.


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடந்த எதிர்ப்புக் கூட்டத்தில் நெல்லை கண்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசிய நெல்லை கண்ணன், “அவுங்க ஜோலியை முடிச்சுடுவீங்க’ என்றும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. நெல்லை கண்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த பாஜக தலைவர்கள் கூடினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே நெல்லை கண்ணனை நெல்லை போலீஸார் இன்று இரவு கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனைம் குற்றம் செய்ய தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
 நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதை பாஜக  தேசிய செயலாளர் ஹெச். ராஜா வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட  ட்விட்டர் பதிவில், “ஆப்ரேஷன் சக்சஸ். பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கொலை செய்யத் தூண்டும் வகையில் SDPI நடத்திய கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் புகார் கொடுத்த பாஜக நிர்வாகிகள், இந்து இயக்க சகோதரர்கள் ...


மேலும் இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட தாமரை சொந்தங்கள், இந்து இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி கலந்த வாழ்த்துகளை உவகையோடு உரித்தாக்குகிறேன் ..தேசமும், தமிழகமும் காக்க நம் தர்ம போராட்டம் தொடரும்! பாரத் மாதா கீ ஜெய்!” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!
India Independence: இந்திய சுதந்திரம் உலக விடுதலைக்கு வித்திட்ட கதை! இதன் பிறகு எத்தனை நாடுகள் சுதந்திரம் பெற்றன தெரியுமா?