நேர்காணல் போதே அதிரடியாக நீக்கப்பட்ட அமமுக மாவட்ட செயலாளர்? டிடிவி.தினகரன் அதிரடி..!

By vinoth kumarFirst Published Mar 10, 2021, 11:18 AM IST
Highlights

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன் அமமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நீக்கியுள்ளார். 

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன் அமமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நீக்கியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்காக அமமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, கட்சி வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. இதையொட்டி தென்மாவட்ட அமமுக நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டிருந்தனர். நேர்காணலும் நேற்று வழக்கம்போல் நடந்தது. 

அப்போது, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பனும் நேர்காணலில் பங்கேற்றார். அப்போத, அமமுக கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார். இதனால் மாவட்ட நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த பரமசிவ ஐயப்பன் கடந்த 2006 முதல் 2011 வரை மாவட்ட கவுன்சிலராக இருந்தார். பின்னர் 2011 உள்ளாட்சி தேர்தலிலும் மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த பரமசிவ ஐயப்பன் அவரது அமமுகவில் இணைந்தார். 

பின்னர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கட்சியினர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். 

click me!