நீட் தேர்வு பதற்றம்... கனிமொழி தற்கொலை... சாவுக்கு யார் காரணம்..?

By Thiraviaraj RMFirst Published Sep 14, 2021, 11:28 AM IST
Highlights

அரியலூர் அருகே சாத்தம்பாடியில் நீட் தேர்வெழுதிய மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அரியலூர் அருகே சாத்தம்பாடியில் நீட் தேர்வெழுதிய மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நீட் தேர்வால் அனிதா உள்ளிட்டவர்களின் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தின. கடந்த நாடாளுமன்ற- சட்டமன்ற தேர்தல்களில் இரு மாநில கட்சிகளுமே வாக்குறுதிகளாக நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தின. திமுக இன்னும் ஒருபடி மேலே சென்று தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என பிரகடனம் செய்தனர். ஆனால், அது முடியவில்லை. இந்நிலையில், 'நீட்' தேர்வு எழுதியிருந்த அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழி 12ஆம் வகுப்பில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், மத்திய மோடி அரசும், திமுக அரசின் பொய் வாக்குறுதியுமே தங்கை கனிமொழி சாவிற்கு காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

click me!