‘சும்மா கிழி’.. திமுகவின் போலி வாக்குறுதிகளை பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய எடப்பாடியார்.. பதறும் திமுக..!

Published : Jun 30, 2021, 01:58 PM IST
‘சும்மா கிழி’.. திமுகவின் போலி வாக்குறுதிகளை பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய எடப்பாடியார்.. பதறும் திமுக..!

சுருக்கம்

நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்பதை திமுக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட் ரத்து செய்யப்படும் என்று கூறிய திமுக, தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று பொய் வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது. 

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிமுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுமான தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டதால் ஏழை மக்கள் பயனடைந்தனர். திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவேண்டும். தடையின்றி அம்மா சிமெண்ட் வழங்க வேண்டும்.

நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்பதை திமுக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட் ரத்து செய்யப்படும் என்று கூறிய திமுக, தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று பொய் வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி குழுவை அமைத்து கண்துடைப்பு நாடகத்தை திமுக நடத்துகிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!