நீரஜ் சோப்ராவுக்கு கோடி கோடிகளாய் குவியும் ரொக்கப்பணம்... அடேங்கப்பா இத்தனை ஆடம்பர பரிசுகளா..?

By Thiraviaraj RMFirst Published Aug 9, 2021, 4:01 PM IST
Highlights

சோப்ராவிற்கு தங்கம் வெல்வதற்கு முன் ஆண்டுக்கு ரூ. 20-30 லட்சம் வரையில் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.  அது இப்போது 1000 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

இந்தியாவின் தங்கமகனாக போறப்படுகிறார் விவசாயியின் மகனாகப்பிறந்து, ஒலிம்பிக்கில் தடகளப்போட்டியில் 100 ஆண்டுகள் கழித்து தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா. அவருக்கு பரிசுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனிநபர் போட்டிகளில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர்.

சோப்ராவின் போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸின் விளையாட்டுப் பிரிவு ஏற்கனவே பல வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக சோப்ராவிற்கு தங்கம் வெல்வதற்கு முன் ஆண்டுக்கு ரூ. 20-30 லட்சம் வரையில் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.  அது இப்போது 1000 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தற்போது, ​​அனைத்து ஆண்டுக்கு ரூ .2.5 கோடிக்கு மேல் கொடுக்க அந்த நிறுவனம் முன் வந்துள்ளது. 

இந்த இமாலய வெற்றியை பாராட்டும் வகையில் தேசமே கொண்டாடி, நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் பலரும் போட்டிபோட்டுக்கொண்டு தங்களது பரிசுகளை வழங்கி வருகிறார்கள். கோடிகளில் நனையும்  நீரஜ் சோப்ராவுக்கு  இவை அனைத்துமே அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாகும். ஹரியானா மாநில முதல்வர் எம்.எல்.கட்டார், "இம்மாநில விளையாட்டு கொள்கையின்படி ரொக்கப்பரிசாக ரூ.6 கோடி,  கிரேட் 1 அரசு வேலையும், குடியிருப்பு மனை ஒன்று குறைந்த விலையில் வழங்கப்படும்" தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர்சிங், "இந்தியாவிற்காக பெருமை சேர்த்த சோப்ராவின் பெற்றோர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்பதால், அரசு சார்பாக ரூ.2 கோடி ரூபாய் அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

மணிப்பூர் மாநில முதல்வர் என்.பிரேன் சிங், "100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு தங்கம்  கிடைக்க வைத்த நீரஜ் சோப்ராவை பெருமை படுத்த முடிவு செய்துள்ளோம். அதனால் அவருக்கு ரொக்கமாக 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கவுள்ளது" என அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 1 கோடி ரூபாயை ரொக்க பரிசாக அளிக்க உள்ளது.  

இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1 கோடி பரிசாக வழங்க உள்ளது. நீரஜ்  ஈட்டி எரிந்த தூரத்தை குறிக்கும் வகையில் 8758 என்ற நம்பர்கள் பொரித்த ஜெர்சியை அவருக்கு வழங்க உள்ளது. எலான் குழும தலைவர் ராகேஷ் கபூர் அறிவித்திருப்பதாவது, "எங்களுடைய குழுமம் சார்பாக நீரஜ் சோப்ராவிற்கு 25 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். இவர்கள் வரிசையில் பிரபல விமான நிறுவனமான இன்டிகோ புதிய அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. அதாவது இன்று முதல், வரும் 2022-ஆம்  வருடம் ஆகஸ்ட்-7-ஆம் தேதி வரை, இண்டிகோ நிறுவனம் சார்ந்த விமானங்களில் நீரஜ் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்து கொள்ளலாம்.

GoAir நிறுவனம் 2025 வரை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அனைவருக்கும் இலவச பயணம் மேற்கொள்ளும் சலுகையை வழங்கியுள்ளது.  இந்த சலுகை தங்கள் நாட்டிற்காக வென்ற அனைவருக்கும் பொருந்தும்.

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திராவும் அட்டகாசமான பரிசை நீரஜ் சோப்ராவுக்கு வழங்க இருக்கிறார். அதாவது நீரஜ் இந்தியா திரும்பிய பின் அவருக்கு "எக்ஸ்யுவி 700 வகை" சொகுசு கார் ஒன்றை பரிசளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவ்வளவு ஏராளமான பரிசுகளை சோப்ரா பெறுவதற்கு காரணம், ஒலிம்பிக் விளையாட்டுகளில்  சுமார் 13 வருடங்கள் தவித்திருந்த இந்தியாவின், வெற்றி என்ற தாகத்தை தணித்தது தான்.

பைஜூ நிறுவனத்தை சேர்ந்த எடக் மஜொர் ரூ.2 கோடியை பரிசாக அளிக்க முன் வந்துள்ளார். அதேபோல் நீரஜ் சோப்ரா இளங்கலை படித்த கல்லூரியான லவ்லி புரபசனல் பல்கலைக்கழகம் ரூ.50 லட்சத்தை நீரஜ் சோப்ராவுக்கு வழங்க முன் வந்துள்ளது. இன்னும் சில பெரிய நிறுவனங்கள் விளம்பரத் தூதுவராக்கவும் நீரஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

click me!