பேருந்து கட்டணத்தை உயர்த்த போகிறதா திமுக? பகீர் கிளப்பும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Aug 9, 2021, 3:11 PM IST
Highlights

வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடவில்லை.  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் மக்களை திசை திருப்புகிறது திமுக அரசு. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே வெள்ளை அறிக்கை ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் மக்களை திசை திருப்புகிறது திமுக அரசு என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கடன் வாங்கி கட்டாய செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை சரிந்துவிட்டது. கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்பே வருமானம் சரிந்துவிட்டது. வருவாய் பற்றாக்குறை இப்படி இருப்பதால், நிதி பற்றாக்குறை கட்டாயம் அதிகரிக்கும். தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் கடனைச் செலுத்தும் தன்மை குறைந்ததால், வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.

மேலும், சொத்து வரி,போக்குவரத்து வரியை அதிமுக உயர்த்தவில்லை?யாரிடம் வரியை வாங்குவது என்று அதிமுக அரசுக்கு தெரியவில்லை. தமிழகத்தில் புள்ளிவிவரங்களின்படி, 2 கோடியே 16 லட்சத்து 24,238 குடும்பங்கள் எனக் கொண்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் உள்ளது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த உற்பத்தியில் 11.41 சதவீதமாக இருந்த வருவாய், அதிமுக ஆட்சியில் 3.8 சதவீதமாக சரிவு ஏற்பட்டுள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார். 

இந்நிலையில், வெள்ளை அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடவில்லை.  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் மக்களை திசை திருப்புகிறது திமுக அரசு. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே வெள்ளை அறிக்கை ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 

அதிமுக பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் திமுக உயர்த்த போவதாக சொல்கிறதா? திமுக அரசு விட்டுச் சென்ற கடனுக்கும் அதிமுக அரசுதான் வட்டி கட்டியது. மக்களை வரிவிதிப்புக்கு தாயர்படுத்துவதாக வெள்ளை அறிக்கை உள்ளது. 

click me!