கேம் பாய்ன்ட் : இன்னும் இத்தனை எம்.எல்.ஏக்கள் மட்டும் போதும்.....அதுக்குமேல் வந்தாலும் சரி......!!!

 
Published : Feb 09, 2017, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
கேம் பாய்ன்ட் :      இன்னும் இத்தனை எம்.எல்.ஏக்கள் மட்டும் போதும்.....அதுக்குமேல் வந்தாலும் சரி......!!!

சுருக்கம்

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் :

தற்போதுள்ள அரசியல் சூழலில், முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு தற்போது  6 எம்எல்ஏக்கள் ஆதரவு  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  மீண்டும்  பல  எம் எல் ஏக்கள்  ஆதரவு தெரிவிக்கும் மன நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தருணத்தில், மேலும்  13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தாலே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உருவாகும் என்பது  குறிப்பிடத்தக்கது.

சசிகலா முல்வராக வாய்ப்பு எப்படி ?

இந்நிலையில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு மேலும் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தால். முதல்வர்  பன்னீர்  செல்வத்திற்கு  ஆதரவு  பெருகும்  என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் கட்சிகளின் பலம் விவரம்...:

அதிமுக கூட்டணி: 136

அதிமுக - 133

கொங்கு இளைஞர் பேரவை-1

மக்கள் ஜனநாயக கட்சி- 1

முக்குலத்தோர் புலிப் படை-1

ஜெயலலிதா நீங்கலாக மிச்சமுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை- 135

தற்போது சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 129

முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அவருக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 6( தற்போது  தென்காசி  தொகுதி எம்எல்ஏ  மோகன்  தாஸ்  பாண்டியன் ஆதரவு , மைலாப்பூர்  எம்எல்ஏ  நடராஜ் ஒபிஎஸ் கு ஆதரவு  தெரிவித்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது)

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 117

இதனை தொடர்ந்து , தற்போது  மேலும் 13 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தந்துவிட்டாலே, சசிகலாவால்  பெரும்பான்மை  நிரூபிக்க முடியாத  நிலை  உருவாகும் என   செய்திகள்  வெளியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!