
மும்பையில் இருந்து கவர்னர் வித்யாசாகர் ராவ், சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுள்ளார். இன்று மதியம் 3 மணியளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்து சேர்வார். அப்போது, அவரை வரவேற்க, முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிகியுள்ளது.
இதற்கிடையில், இன்று மாலை கவர்னரை சந்திக்க அனுமதி கேட்டு இருப்பதாக அதிமுக பொது செயலாளர் சசிகலா தரப்பினர் தெரிவிக்கின்றனர். பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவது அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கவர்னரை சந்திக்கும் ஒ.பி.எஸ்., தனது ராஜினமா கடிதத்தை திரும்ப பெற இருப்பதாகவும், அப்போது, அதிமுகவில் நடக்கும் குளறுபடிகள் குறித்து அவரிடம் விளக்கமாக கூறி, சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய வேண்டாம் என கூற இருப்பதாகவும் பேசப்படுகிறது.