
எம்எல்ஏக்களை மீட்க காவல்துறையை அணுகிய ஒபிஎஸ்:
காவல் துறை இயக்குனர் ராஜேந்திரனுடன், முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிவில், தற்போது சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மற்ற எம்எல்ஏக்களை மீட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது
இது தொடர்பாக, சென்னை காவல் துறை இயக்குனர் ராஜேந்திரனுடன், முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், தற்போது சிறைபிடித்து வைக்கபட்டுள்ளதாக கூறப்படும் மற்ற எம்எல்ஏக்களை மீட்க என்ன செய்வது ? எப்படி நடவடிக்கை எடுத்து , மற்ற எம்எல்ஏக்களை மீட்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
காவல் துறைக்கு அதிகாரம் உண்டா ?
ஒரு வேளை, சிறைப்பிடிகபட்டதாகவே இருந்தாலும் , எம்எல்ஏக்களை மீட்பதற்கு, காவல் துறைக்கு அதிகாரம் உண்டா என்றால், தற்போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை பெயரில், தேவைபட்டால் அவர்களுக்கான அதிகாரம் கொடுக்கும் நிலைமை வரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா முதல்வராக பதவி ஏற்க அனுமதிக்க கூடாது உச்சநீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவரால் தொடரப்பட்ட வழக்கு , அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.