ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்ததால் புதுச்சேரி ஓம்சக்தி சேகர் கட்சியில் இருந்து நீக்கம் – அதிமுக தலைமை அதிரடி நடவடிக்கை

 
Published : Feb 09, 2017, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்ததால் புதுச்சேரி ஓம்சக்தி சேகர் கட்சியில் இருந்து நீக்கம் – அதிமுக தலைமை அதிரடி நடவடிக்கை

சுருக்கம்

அதிமுகவில் சசிகலா – ஓ.பி.எஸ். தரப்பினர் இடையே பெரும் கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. இதில், அதிமுகவின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகர், ஒ.பிஎஸ்.ஸுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனால், ஓம்சக்தி சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் கூறியுள்ளார்.

அதற்கு, முன்னாள் எம்எல்ஏ. ஓம்சக்தி சேகர், தான் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. புதுவை மாநில அதிமுகவே பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து, ஓம்சக்தி சேகர், அதிமுகவின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி முதல்வர் நாராயண சாமியை எதிர்த்து, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அதிமுக பொது செயலாளர் சசிகலா, முதலமைச்சராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்த்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, நாளை வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு