தமிழகத்தை  "கொள்ளை நோய் மாநிலமாக அறிவிக்க வேண்டும்" - வைகோ அதிரடி..!

 
Published : Oct 16, 2017, 03:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
தமிழகத்தை  "கொள்ளை நோய் மாநிலமாக அறிவிக்க வேண்டும்" - வைகோ அதிரடி..!

சுருக்கம்

Need to announce the tn is killer state said vaiko

தமிழகத்தை  கொள்ளை நோய் மாநிலமாக அறிவிக்க வேண்டும் - வைகோ 

எதனையும்  மறவாத  வைகோ

மக்களுக்காக  போராடுவதில்  முதலில்  வந்து நிற்பது  வைகோ தான்....இத்தனைஆண்டு கால  அரசியல் அனுபவங்களில்   எதனையும்  மறவாமால் நன்றி  தெரிவிப்பதிலும் சரி...மரியாதை  செலுத்துவதிலும்  சரி... மறுமலர்ச்சி  திராவிட  முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ தவறியதே இல்லை 

இப்படி  சொல்லிக்கொண்டே  போகலாம் ... அவரை பற்றி....அதில்  ஒன்று தான்  இன்று  நடைப்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 218ம் ஆண்டு நினைவு நாள்..

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு  கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட இடத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மறுமலர்ச்சி திமுக பொது செயலாளர் வைகோ மலர்வளையம் வைத்து வீர வணக்கத்தை செலுத்திய பின்  மாலை அணிவித்து மரியாதை செய்தார்

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் வைகோ,

தமிழகத்தில்  மானவாரி பயிரிடும் விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை கிடைக்காமால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசயிகளை தமிழக அரசு வஞ்சிக்ககூடாது என்றும், பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்ட விவசாயிகளை திரட்டி வரும் அக்-31ந்தேதி கோவில்பட்டியில் தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்  எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வருவதற்கு முன்பு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட தமிழக அரசு தவறி விட்டது.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளுக்கான வசதி அரசு மருத்துவமனையில் இல்லை,  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாநிலத்தினை "கொள்ளைநோய் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக அறிவிக்க வேண்டும்", நியாயத்திற்காக போராடுபவர்களை வன்முறையால் தமிழக அரசு அடக்க நினைக்க கூடாது, மணல் கொள்ளை, கூடன்குளம் அணு உலையை எதிர்த்து போராட்டம் நடத்திய முகிலனை கைது செய்தது கண்டிக்கதக்கது, அவரை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்  என்றும்  வைகோ  தெரிவித்தார்.

இந்த  நிகழ்வின் போது  மதிமுக தொண்டர்கள்,பொதுமக்கள்  என திரளானோர் கலந்துக்கொண்டனர்  என்பது  குறிப்பிடத்தக்கது 

PREV
click me!

Recommended Stories

எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்த வரவேற்பு.. TVKவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. செங்கோட்டையன் ஓபன் டாக்
ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!