
டிஸ்சார்ஜ்:
தமிழகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல் அசாதாரண சூழலில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் 'டிஸ்சார்ஜ்' ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை :
சசிகலா முதல்வராக உள்ளார் என்ற இன்ப அதிர்ச்சியில், அவருடைய கணவர் நடராஜனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
டிஸ்சார்ஜ்:
தற்போது, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் , சசிகலா ஒரு அணியாகவும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்நிலையில் தற்போது உடல் நிலை சீராக உள்ளதால் இன்று நடராசன் டிஸ்சார்ஜ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடைய டிஸ்சார்ஜ் சம்பவம் தற்போது ஒரு விதமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. நடராஜன் மருத்துவமனையில் இருந்து வெளிவந்தால், சசிகலாவுக்கு ஒரு விதமான பலம் சேரும் என கூறப்படுகிறது.