“NO Wi Fi , NO NEWSPAPER.... வெளியே என்னதான் நடக்கிறது....??" புலம்பும் எம்எல்ஏக்கள் ...!!!

 
Published : Feb 10, 2017, 05:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
“NO  Wi Fi , NO  NEWSPAPER....  வெளியே  என்னதான்  நடக்கிறது....??" புலம்பும்  எம்எல்ஏக்கள் ...!!!

சுருக்கம்

தற்போது சசிகலா  ஆதரவு எம்எல்ஏக்கள்  சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து  தற்போது , பல்வேறு தகவல்கள்  வெளியாகி உள்ளது மேலும், அந்தந்த ஊர் எம்எல்ஏக்கள்  காணவில்லை என , பொதுமக்கள்  புகார் தெரிவித்து  வருவதும் ஒருபுறம் பார்க்க முடிகிறது

புலம்பல் :

தமிழகத்தில் நிகழும் அசாதாரண  அரசியல் சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற  எண்ணம் தற்போது எழுந்துள்ளது. இதற்கிடையில் தற்போது சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளதாக  கூறப்படும்  எம்எல்ஏக்கள்  மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக தகவல் தெரிவிகின்றன. அதன்படி,தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில்  வை பை   இணைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ,

ஒரு சிலர்  தூக்கம் வராமால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி  உள்ளதாகவும்,

தகவல்  தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால்அவர்கள் வேறு யாருடனும் தொடர்பு  கொள்ள முடியாமல் தவிப்பதாகவும்  , தினசரி  என்ன  நடக்கிறது என்பது கூட தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, அவர்கள்  தவித்து வருவதாகவும்  செய்திகள் வெளியாகி உள்ளது.

சட்டப்படி  முயற்சி :

இந்நிலையில், சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக  வெளிவரும்  தகவலை  அடுத்து,  தற்போது பல்வேறு கட்ட  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல் துறையினர் , எம்எல்ஏக்களை  மீட்க  திட்டமிட்டு இருப்பதாக  செய்திகள் வெளியாகி உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!