வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்.. 14 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும் என தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Mar 15, 2021, 12:57 PM IST
Highlights

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால் 14 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும் என வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் வெங்கடசலம் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால் 14 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும் என வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் வெங்கடசலம் தெரிவித்துள்ளார். வாராக்கடனை காரணம் காட்டி இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய பட்ஜேட்டில் அறிவிக்கப்பட்டது. 

இதை கண்டித்து இன்றும், நாளையும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 14 ஆயிரம் வங்கி கிளைகளில் இருந்து 60 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேட்டியளித்த வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் வெங்கடசலம், 

பொத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்றும் இது அரசின் தவறான முடிவு என்றும் தெரிவித்தார். பொருளாதாரத்தை பாதிக்கும் இந்த முடிவை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்ததால் 14 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 

click me!