சசிகலா புஷ்பாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகி… தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!!

By Narendran S  |  First Published Sep 14, 2022, 8:24 PM IST

சசிகலா புஷ்பாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பாஜக மாநில பொதுசெயலாளர் பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


சசிகலா புஷ்பாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பாஜக மாநில பொதுசெயலாளர் பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தியாகி இமானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு நாள் நேற்று அனுசகரிக்கப்பட்டது. இதனையொட்டி பரமக்குடியில் இருக்கும் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் பாஜக சார்பில் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளா் பொன்.பாலகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாநிலச் செயலாளா் அஸ்வத்தாமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: சமூக ஆர்வலர் முகிலன் கைது... கரூர் அரசு மருத்துவமனையில் உச்சக்கட்ட பரபரப்பு!!

Tap to resize

Latest Videos

அப்போது சசிகலா புஷ்பாவை சுற்றி ஆண்கள் கூட்டம் இருந்த நிலையில் பின்னால் இருந்து ஒரு கை அவரின் முடியை பிடித்து இழுத்துள்ளது. அப்போது அவருக்கு பின்னால் பாஜக மூத்த நிர்வாகியும் பொதுச்செயலாளருமான பொன்.பாலகணபதி சசிகலா புஷ்பாவை இடித்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதோடு சசிகலா புஷ்பாவின் கையை அவர் பிடிக்க முயன்றதாகவும், கையை வைத்து சசிகலா புஷ்பாவை தொடும்படி சென்றதாகவும் கூறப்படுகிறது. அவரின் கையை சசிகலா புஷ்பா அடுத்தடுத்து தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கீழ்த்தரமான அரசியல் செய்யக்கூடாது... தமிழிசை சௌந்தரராஜனை விளாசிய நாராயணசாமி!!

இதுக்குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதை அடுத்து பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதிக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பாஜகவின் சசிகலா புஷ்பாவிடம் பொது இடத்தில் அக்கட்சியின் மாநில பொதுசெயலாளர் பொன்.பாலகணபதி அநாகரீகமாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

click me!