"வரிசையில் வாருங்கள்"... நத்தம் விஸ்வநாதனுக்கு தடை போட்ட போலீசாருடன் வாக்குவாதம் -"எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்"

 
Published : Dec 24, 2016, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
"வரிசையில் வாருங்கள்"...  நத்தம் விஸ்வநாதனுக்கு தடை போட்ட போலீசாருடன் வாக்குவாதம் -"எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்"

சுருக்கம்

எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலத்த வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை பொதுமக்களுடன் வரிசையில் வர போலீசார் சொல்ல அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று விவேக் படத்தில் ஒரு வசனம் வரும். அதுபோல் தமிழக அரசியலில் நான்கு முக்கிய அமைச்சர்களில் ஒருவராக அதிகாரமையத்தில் இருந்தவர் நத்தம் விஸ்வநாதன்.

மதுவிலக்கு , மின்சாரத்துறையின் சக்தி மிக்க அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் காலத்தில் நடைபெற்ற முறைகேடுபற்றி ஏகப்பட்ட புகார்கள் எழுந்தது. பின்னர் அவர் தூக்கி எரியப்பட்டார். ஐ.பெரியசாமியுடன் கைகோர்த்து தேர்தலில் ஈடுபட்டார் என்று கூறி அவரை ஐ.பெரியசாமியை எத்ர்த்து நிற்க வைத்ததாகவும் இப்போது தோல்வி அடைந்து திருதிருவென்று முழிக்கிறார் என கடந்த செயற்குழுவில் ஜெயலலிதா பகீரங்கமாக குற்றம் சாட்டினார். 

ஆனால் அதன் பின்னர் கட்சியில் அவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் சமாதிக்கு நத்தம் விஸ்வநாதன் அஞ்சலி செலுத்த ஆதர்வாளர்கள் சிலருடன் வந்தார். அஞ்சலி கூட்டம் நடந்தவுடன்  பந்தாவாக விஐபி செல்லும் பாதையில் செல்ல முயன்ற அவரை தடுத்த போலீசார் வரிசையில் பொதுமக்களுடன் வரிசையில் செல்லுங்கள் என்று கூறினர். 

இதனால் வெகுண்டுபோன  நத்தம் விஸ்வநாதன் நான் யார் தெரியுமா? என்று பழம் பெருமை பற்றி சொல்லபோனார். அதற்கு இடைமறித்த போலீசார் யாராக இருந்தால் என்ன சார் இப்ப நீங்க எம்.எல்.ஏ கூட இல்லை அப்புறம் எதைவைத்து உங்களை விஐபி வழியாக அனுப்ப முடியும் . நீங்கள் பொதுமக்கள் வரிசையிலேயே செல்லுங்கள் என்றனர்.

கடைசிவரை அவரை செல்ல அனுமதிக்கவில்லை  இதனால் கோபத்துடன் இன்ஸ்பெக்டர் பெயரை படித்துவிட்டு பார்த்துக்கிறேன் என்று சென்றுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த சிலர் இன்ஸ்பெக்டரிடம் அவர் முன்னாள் அமைச்சர் எனபது தெரியாதா என்று கேட்டுள்ளனர். 

அதற்கு அவர் தெரியுங்க அதுக்கு என்ன செய்றது. எங்களுக்கு கொடுத்த இன்ஸ்ட்ரக்‌ஷன் அப்படின்னு சொன்னதை கேட்டு வாயடைத்து போனார்கள் கேள்வி கேட்டவர்கள். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன், வசன வாழுதுய்யான்னு சொல்லிவிட்டு நடையை கட்டினார்கள். 

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!