நத்தம் விஸ்வநாதன் வெற்றிக்கு ஆபத்தா? நீதிமன்றம் படியேறிய திமுக.. அதிர்ச்சியில் அதிமுக..!

Published : Aug 17, 2021, 02:00 PM IST
நத்தம் விஸ்வநாதன் வெற்றிக்கு ஆபத்தா? நீதிமன்றம் படியேறிய திமுக.. அதிர்ச்சியில் அதிமுக..!

சுருக்கம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11,932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் வெற்றியை உடனடியாக ரத்து செய்து இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11,932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாக தேர்தல் செலவு செய்துள்ளார். 

ஆகையால், அவரின் வெற்றியை உடனடியாக ரத்து செய்து இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் வழக்கு தொடுத்துள்ளார். இந்த தேர்தல் வழக்கு விரைவில் விசாரணைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்த வரவேற்பு.. TVKவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. செங்கோட்டையன் ஓபன் டாக்
ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!